அமெரிக்காவில் 1,000 ஆண்டு பழமை வாய்ந்த தமிழகச் சிலை

அமெரிக்காவில் 1,000 ஆண்டு பழமை வாய்ந்த தமிழகச் சிலை

1 mins read
9c19c823-68e3-4d71-b187-91c3e07dfd3b
படம்: இணையம் -

நாகை: அமெ­ரிக்­கா­வில் உள்ள ஓர் அருங்­காட்­சி­ய­கத்­தில் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த செம்­பி­யன் மகா­தேவி உலோகச் சிலை இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. தமி­ழக சிலை கடத்­தல் தடுப்­புப் பிரிவு காவல்­துறை­யி­னர் இத்­த­க­வலை தெரி­வித்­துள்­ள­னர்.

நாகப்­பட்­டி­னத்­தில் உள்ள செம்­பி­யன் மகா­தேவி கிரா­மத்­தில் தற்­போது உள்ள சிலை போலி­யா­னது என்­றும் தெரிய வந்­துள்­ளது.

அமெ­ரிக்க அருங்­காட்­சி­ய­கத்­தில் இருப்­பது ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்­கும் முந்­தைய, சோழ வம்­சத்தை சேர்ந்த பழ­மை­யான செம்­பி­யன் மகா­தேவி உலோகச் சிலை­யா­கும்.

இந்­தியா சுதந்­தி­ரம் அடை­வ­தற்­கும் முன்பே இந்­தச் சிலை மாய­மா­னது. அதன் பிறகு சிலை என்­ன­வா­னது, எங்­குள்­ளது என்­பன போன்ற தக­வல்­கள் ஏதும் வெளி­வ­ர­வில்லை.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் சிலைக்­க­டத்­தல் சம்­ப­வங்­கள் தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ணம் இருந்­தன.

எனவே சிலைக் கடத்­த­லைத் தடுப்­ப­தற்கு என்றே தமி­ழக காவல்­து­றை­யில் சிறப்­புப் பிரிவு உரு­வாக்­கப்­பட்­டது.

பொன்.மாணிக்­கவேல் உட்­பட பல அதி­கா­ரி­கள் இப்­பி­ரி­வுக்கு தலை­மை­யேற்று மேற்­கொண்ட அதி­ரடி நடவ­டிக்­கை­கள் கார­ண­மாக சிலைக் கடத்­தல் குறைந்­தது ஒரு­பக்­கம் இருக்க, பல்­வேறு நாடு­க­ளுக்கு கடத்­திச் செல்­லப்­பட்ட அரிய சிலை­கள் பல­வற்றை மீட்­கும் நட­வ­டிக்­கை­களும் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.

இந்­நி­லை­யில், சுமார் 75 ஆண்­டு­க­ளுக்கு முன்பே தமி­ழ­கத்­தில் இருந்து கடத்­திச் செல்­லப்­பட்ட அரிய உலோகச் சிலையை மீட்டு வரு­வ­தற்­கான முயற்­சி­கள் தொடங்கி உள்­ள­தாக சிலை கடத்­தல் தடுப்­புப் பிரிவு தெரிவித்துள்ளது.