கல்குவாரி பாறை சரிந்து இரு ஊழியர்கள் மரணம்

கல்குவாரி பாறை சரிந்து இரு ஊழியர்கள் மரணம்

1 mins read
6762b266-7d70-46d3-8fbf-ac165dc1bb82
-

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் அருகே உள்ள மலைப்பகுதியில் 12 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், நேற்று காலை குவாரி ஒன்றில் ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, பாறைகள் சரிந்து விழுந்தது. இதில் வினோத், சுப்ரமணி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். காவலர்களும் மீட்புப் படையினரும் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கல்குவாரி மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் வெங்கடப்பிரியா தெரிவித்திருக்கிறார்.