திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லூர் அருகே உள்ள அத்தாணி கிராமத்தைச் சேர்ந்தவர் காய்கறி வியாபாரி மாரிமுத்து, 55. ஆடி அமாவாைசயை முன்னிட்டு நேற்று முன்தினம் அருகில் உள்ள கறுப்புக் கோவிலுக்குச் சென்றார். கீழே அறுந்துகிடந்த மின்கம்பியை மாரிமுத்து மிதித்ததால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த மாரிமுத்துவின் அண்ணன் அரவன், தம்பியைக் காப்பாற்ற முயன்றார். அவரையும் மின்சாரம் தாக்கியது.
இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மண்ணச்சநல்லூர் காவலர்கள் அவர்களது உடல்களை மீட்டு ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வரு கின்றனர்.

