பிரதமர் மோடி: மாணவர்களின் வெற்றியே இந்தியாவின் ெவற்றி

பிரதமர் மோடி: மாணவர்களின் வெற்றியே இந்தியாவின் ெவற்றி

2 mins read
51a764d4-3b9a-4ce9-88fd-1a97b7d6387c
அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவுக்குப் பிறகு 70 ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக பிரதமர் மோடி பங்கேற்று பதக்கங்கள், பட்டங்கள் வழங்கினார். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: இந்திய இளைஞர்கள் மீது உலகமே நம்பிக்கை வைத்து உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி, மாணவ-மாணவியர்களின் கற்றலே இந்தியாவின் கற்றல். அவர்களது வெற்றியே இந்தியாவின் வெற்றி என பிரதமர் நரேந்­திர மோடி பெரு மிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் 42வது பட்­ட­மளிப்பு விழா நேற்று நடைெபற்றது.

இவ்விழாவில், பிர­த­மர் மோடி கலந்துகொண்டு, 69 மாண­வர்­களுக்குப் பட்­டங்­கள், தங்­கப்­பதக்­கங்களை வழங்­கிச் சிறப்புரையாற்­றி­னார்.

"இந்தியாவில் ஒவ்வொரு துறையும் வளர்ந்து வருகிறது. கைபேசி தயாரிப்பில் கடந்த ஆண்டு இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது. கடந்த ஆறாண்­டு­களில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட புதிய ­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்கை பெரு­ம­ளவில் உயர்ந்­துள்­ள­து.

"தொழில் தொடங்க உகந்த மாநி­லங்­க­ளின் தர­வ­ரி­சை­யில் தமிழ்­நாடு மூன்­றா­மி­டத்­துக்கு முன்­னே­றி­யுள்­ள­து," என மோடி கூறினார்.

முத­ல்வர் மு.க.ஸ்டா­லின் பேசியபோது, "கல்வி என்பது யாராலும் திருடமுடியாத சொத்து," என்று கூறியவர், மாநிலத்தில் உள்ள அனை­வ­ருக்­கும் உயர்­கல்வி, ஆராய்ச்­சிக் கல்வி எனும் இலக்கை நோக்­கி தமிழக அரசு செயல்­பட்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

திமுக இயக்கத்தின் அடிப்படை கொள்கையே கல்விதான் என்றும் அவர் சொன்னார்.

"பட்­டம்பெறும் மாண­வர்­கள் வேலை­தே­டு­வோ­ராக இல்­லா­மல் வேலை கொடுப்­ப­வ­ராக இருக்க வேண்­டும்," எனக் கூறிய உயர்­கல்­வித் துறை அமைச்­சர் பொன்­முடி, உயர்­கல்வி பயில்­வோர் எண்­ணிக்­கை­யில் தமிழ்­நாடு முன்­னி­லை­யில் இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார்.

இருநாள் பயணமாக தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளையும் சார்ந்த தலைசிறந்த 69 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பிர­த­மர் மோடிக்­கு மு.க.ஸ்டா­லின் நேற்று திரு­வள்­ளு­வர் சிலையைப் பரி­ச­ளித்­தார்.

இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள். இந்திய இளைஞர்கள் மீது இவ்வுலகமே நம்பிக்கை வைத்துள்ளது.

பிரதமர் நரேந்­திர மோடி