ஒரே ஊசியைப் பயன்படுத்தி 39 மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட தாதிமைக் கல்லூரி மாணவர் கைது

ஒரே ஊசியைப் பயன்படுத்தி 39 மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட தாதிமைக் கல்லூரி மாணவர் கைது

1 mins read
313e826d-3ca6-454d-9111-786212dc8e58
தாதி­யா­கப் பயிற்சி பெற்று வரும் கல்­லூரி மாண­வர் ஜிதேந்­திர அஹி­வார். படம்: ஊடகம் -

போபால்: மத்­தி­யப் பிர­தே­சத்­தில் தாதி­யா­கப் பயிற்சி பெற்று வரும் கல்­லூரி மாண­வர் ஒரு­வர், பள்ளி மாண­வர்­கள் 39 பேருக்கு ஒரே ஊசி­யைப் பயன்­ப­டுத்தி தடுப்­பூசி போட்டுள்­ளார். இதை­ய­டுத்து மா­ண­வ­ர் கைதானார்

இந்த விவ­கா­ரம் தொடர்­பாக மாவட்டத் தடுப்­பூசி அதி­கா­ரி­யும் இடைநீக்கம் செய்­யப்­பட்­டுள்­ளார்.

"தவறு என் ேமல் இல்லை. தடுப்­பூசி போடு­வ­தற்கு என்­னி­டம் ஒரு ஊசி மட்­டும்­தான் தரப்­பட்­டது. இதை வைத்துதான் அனை­வ­ருக்­கும் போட­வேண்­டும் என நினைத்து தடுப்­பூசி போட்­டு­விட்­டேன்," என்று விளக்­கம் அளித்­துள்­ளார்.

மத்­தி­யப் பிர­தேச மாநி­லம், சாகர் நக­ரில் உள்ள ஜெயின் மெட்ரி குலே­ஷன் பள்­ளி­யில் நேற்று முன்­தி­னம் கொரோனா தடுப்­பூசி முகாம் நடை­பெற்­றது.

இம்முகா­மில் தடுப்­பூசி போட்டு விடு­வ­தற்­காக ஒரு தனி­யார் தாதிமைக் கல்­லூரி மாண­வ­ரான ஜிதேந்­திர அஹி­வார் என்­ப­வரை மாவட்ட சுகா­தார அலு­வ­ல­கம் நிய­மித்­தி­ருந்­தது.

அந்த இளை­யர், ஒரு­முறை பயன்­ப­டுத்­திய ஊசியை மாற்­றாமலேயே அடுத்­த­டுத்து வந்த 39 மாண­வர்­க­ளுக்­கும் தடுப்­பூசி போட்டுவிட்­டுள்­ளார்.

நீண்ட நேரத்திற்குப் பின்னரே அங்­கி­ருந்த பெற்­றோருக்கு இது தெரியவந்தது. பின்­னர், அவ­ரு­டன் கடும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர். ஆனால், அதற்கு அலட்­சி­ய­மாகப் பதி­ல­ளித்த இளையர், தனக்கு மாவட்ட சுகா­தா­ரத்­துறை சார்­பில் ஒரு ஊசி­தான் வழங்­கப்­பட்­ட­தாகத் தெரி­வித்­தார்.