'மீண்டும் இணைவதற்கு வாய்ப்பில்லை'

'மீண்டும் இணைவதற்கு வாய்ப்பில்லை'

1 mins read
8f2d1cdf-331e-4a00-a99e-97a76b42d777
-

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்த வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றமே விசாரிக்கும் எனத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மூன்று வாரத்துக்குள் இவ்வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

கடந்த 11ஆம் தேதி நடை­பெற்ற அதி­முக பொதுக்­கு­ழு­கூட்டத்தின்போது சட்டவிதி­கள் மீறப்­பட்­டதா­க­வும் பழ­னி­சாமி இடைக்­கா­லப் பொதுச்­செ­ய­லாளராகத் தேர்வு செய்­யப்­பட்­டதை ரத்து செய்­யக் கோரி­யும் ஓ.பன்­னீர்­செல்­வம் தொடர்ந்த மேல்முறை­யீட்டு வழக்கு, உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதி­பதி என்.வி.ரமணா அமர்வு முன்பு நேற்று விசா­ர­ணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, தாங்கள் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்ட மாகத் தெரிவித்துவிட்டனர்.