சென்னை: மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்தப் பருவநிலை மாற்றம் காரணமாக தலைநகர் சென்னையில் 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் வலி நோய் வேகமாகப் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் குறைந்தபட்சம் 50 பேராவது மருத்துவமனைகள் பக்கம் சிகிச்சை பெற வருவதாக வும் குறிப்பாக, குழந்தைகள், முதியவா்களுக்கு அதிக அளவில் இப்பிரச்சினை ஏற்படுவதாகவும் கண் மருத்துவா்கள் கூறுகின்றனர்.
இந்த கண் வலி நோய் எளி தாகக் குணப்படுத்தக்கூடிய ஒன்று தான் என்றாலும்கூட உரிய நேரத் தில் சிகிச்சை தேவை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
கண் விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் பாக்டீரியா தொற்றால் 'மெட்ராஸ் ஐ' ஏற்படுகிறது. இது காற்று, தூய்மைக்கேட்டால் பரவு கிறது. கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து போகுதல், நீர் சுரந்து கொண்டே இருப்பது, இமைப்பகுதி ஒட்டிக்கொள்வது ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள்.
வெளியே நடமாடும்போது கண் கூச்சம் ஏற்படும். ஒரு கண்ணில் ஏற்படும் பாதிப்பு மற்றொரு கண்ணி லும் பரவ அதிக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. காலம் தாழ்த்தினால் பார்வையில் தெளிவற்ற நிலை ஏற்படும் என கண் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

