சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிலும் குறிப்பாக, விடுதிகளுடன்கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் பணியில் அமர்த்தப்படுவது மிகமிக அவசியம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனி யாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி, 17, என்ற மாணவி கடந்த 13ஆம் ேததி தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதற்கு என்ன காரணம் என்று பல கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு வாரத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயின்ற ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தன் மகளின் மரணம் தொடர்பில் ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
காவலர்கள் தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதிடுகையில், "கனியாமூர் சம்பவத்தில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் காவலர் களுக்கு இல்லை. பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இணையம், நேரடி வகுப்பு என இருவிதமாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. நிலைமையைச் சரிசெய்ய இரு வாரங்களாகும்," என்றார்.
"இதுபோன்ற சம்பவங்கள் நீண்டநாள்களுக்குத் தொடரக் கூடாது. விரைவில் பள்ளியைத் திறந்து வகுப்புகளை நடத்த நட வடிக்கை எடுக்கவேண்டும்.
"தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்கவேண்டும். விடுதிகளுடன் செயல்படும் பள்ளி களில் மனநல ஆலோசகர்கள் இருப்பதும் மிகவும் முக்கியம்.
"மாணவர்களைப் படிக்கும் இயந்திரமாகவோ, மதிப்பெண்கள் பெறும் கருவியாகவோ மட்டும் பார்க்காமல், அவர்களுக்கான சிறந்த வெளிப்புறச் சூழலை உருவாக்கித் தரவேண்டும்," என நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்து, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்டு 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கு வதற்காக 14417 எனும் விழிப்புணர்வு எண்ணை கடந்த 2017ல் பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியது.
இருப்பினும், தங்களது பிரச்சினைகள் ெவளியே தெரிந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே பல மாணவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்வதில்லை. ஆனால், உதவி மையத்திற்கு அழைக்கும் மாணவ மாணவிகளின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளதை உதவி மைய அலு வலர்கள் மீண்டும் நினைவூட்டி உள்ளனர். மாணவர்களிடையே ஏற்படும் இவ்விழிப்புணர்வு வருங் காலத்தில் குற்றங்களைக் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.

