மண்டை ஓட்டுக்கு மரபணு சோதனை

மண்டை ஓட்டுக்கு மரபணு சோதனை

1 mins read
c7706c03-0fa8-422e-ab10-3c6fa67499d3
-

சிவகங்கை: கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள மண்டை ஓடு 2,600 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என கணித்துள்ள தொல்லியல் துறையினர், அதனை மரபணு (டிஎன்ஏ) சோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் 8ஆம் கட்ட அகழாய்வில் கொந்தகை தளத்தில் கிடைத்த முதுமக்கள் தாழிகளுக்குள் இருந்த மண்டை ஓடு, கை, கால் எலும்புகள், உணவுக் குவளை, தண்ணீர் குவளை உட்பட 20 பொருள்கள் வெளியே எடுக்கப்பட்டன. இவற்றில் மண்டை ஓட்டை மட்டும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு, சிகாகோ பல்கலைக்கழக நிபுணர் குழுவினர் மரபணு சோதனைக்கு உட்படுத்த உள்ளனர்.