ரகசிய அறை அமைத்து ஒரு டன் குட்கா கடத்தல்

ரகசிய அறை அமைத்து ஒரு டன் குட்கா கடத்தல்

1 mins read
9e9a94ea-a067-4932-b40c-79d94423c6b8
-

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாளையம் பகுதியில் தொப்பூர் காவலர்கள் வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சிறிய ரக சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

வாகனத்தின் உள்ளே ரகசிய அறை இருப்பதைக் கண்டுபிடித்த னர். அதனுள் ஒரு டன் குட்கா பொருள்கள் மூட்டைமூட்டையாக இருந்தன.

அதன் மதிப்பு 20 லட்சம் ரூபாய். லாரியை ஓட்டி வந்த வேலூர் பகுதியைச் சேர்ந்த சாதிக் பாட்சா, அவருடன் இருந்த பயாஸ் என்பவரிடம் விசாரித்ததில், பெங்களூரில் இருந்து சேலத்துக்கு குட்காவைக் கடத்தியது தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப் பட்டனர். குட்கா, சரக்கு லாரி பறிமுதல் செய்யப்பட்டது.