சென்னை: சதுரங்க ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவுக்கு தன்னைப் பாதுகாப்பாக அழைத்துச்சென்று, திரும்பவும் வீட்டில் கொண்டுவந்து விட்டுச்சென்ற ஆறு காவலர்களைத் தன் வீட்டுக்கு நேரில் அழைத்து, "நீங்கள்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்," என்று நடிகர் ரஜினி காந்த் பாராட்டியுள்ளார்.
மாமல்லபுரத்தில் நடக்கும் 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா கடந்த 28ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில், தனது மகள் ஐஸ்வர்யாவுடன் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்தை போயஸ் தோட்டம் வீட்டில் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு அழைத்துச் சென்று மீண்டும் போயஸ் தோட்டம் வீட்டில் கொண்டுவந்து விடும் பொறுப்பு நுங்கம்பாக்கம் காவலர் களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனைப் பொறுப்புடன் செய்த காவலர்களால் நெகிழ்ந்துபோன ரஜினிகாந்த், 'காவல்துறையினரான நீங்கள்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்' எனப் பாராட்டினார்.

