கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட ஐவர் கைது

கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட ஐவர் கைது

1 mins read
87cb7cbd-7c99-47d7-b936-d44201c104e6
கள்ளநோட்டை அச்சடித்து புழக்கத்தில் விட்ட இவர்களிடம் இருந்து 138,500 ரூபாய் நோட்டுகளையும் கள்ளநோட்டு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்கேனர், பிரிண்டர் உள்ளிட்ட கருவிகளையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர். படம்: ஊடகம் -

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் கள்ள நோட்டுகளை அச்சடித்து, புழக்கத்தில் விட்ட ஐவர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

மூக்கன் என்பவரது பெட்டிக் கடைக்குச் சென்ற இந்த ஐவரில் ஒருவர், பளபளக்கும் 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து சிகரெட் கேட்டுள்ளார். அது கள்ளநோட்டு என்பதை அறிந்த கடைக்காரர் காவல் துறைக்கு ரகசியமாக தகவல் சொன் னதை அடுத்து, அங்கு வந்த காவ லர்கள் ஐவரையும் பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் ஐவரும் கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டை அச்சடித்து வந்ததும் தெரியவந்தது.