பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு: மாணவர் பிடிபட்டார்

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு: மாணவர் பிடிபட்டார்

1 mins read
b36ae430-12c0-4b60-900f-75e6df30fc32
-

திருப்­பத்­தூர்: ஆம்­பூ­ரில் பொறி­யியல் கல்­லூரி மாண­வ­ரைக் கைது செய்­தது மத்­திய உள­வுத் துறை. பயங்­க­ர­வாத அமைப்­பு­டன் இளை­ய­ருக்­குத் தொடர்பிருப்பதாக 19 மணி நேர விசா­ர­ணைக்­குப் பிறகு தெரியவந்ததை அடுத்து இந்நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

திருப்­பத்­தூர் மாவட்­டம், ஆம்­பூர் நீலிக்­கொல்லை மசூதி தெரு­வைச் சேர்ந்­த­வர் கல்­லூரி மாண­வர் அன்­சார் அலி, 22. இவ­ருக்கு வெளி­நாட்­டைச் சேர்ந்த ஒரு கும்­ப­லு­டன் தொடர்பிருப்­பது தெரி­ய­வர, மத்­திய உள­வுத்­துறை காவ­லர்­கள் 16 பேர், அதி­காலை 3 மணியள­வில் அன்­சார் அலி­யின் வீட்­டைச் சுற்­றி­வ­ளைத்து தூங்­கிக்கொண்­டி­ருந்­த­வரை வேலூர் மாவட்­டம், அணைக்­கட்டு காவல்­நி­லை­யத்­துக்கு அழைத்­துச் சென்­ற­னர். அங்கு அவ­ரி­டம் நடத்­திய விசா­ர­ணை­யில், இந்­தி­யா­வில் தடை செய்­யப்­பட்ட இயக்­கங் களின் பதி­வு­க­ளுக்கு சமூக வலைத்தளங்­கள் மூலம் இவர் தனது ஆத­ரவைத் தெரி­வித்து மறு பதிவிட்டதாக தெரிவித்தார்.