திருவேற்காடு: சென்னை திருவேற்காடு அருகே மாணவி களுக்கான தாதிமைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி விடுதியில் தங்கி ஈரோட்டைச் சேர்ந்த சுமதி என்ற மாணவி இரண்டாமாண்டு படித்துவந்தார்.
வகுப்புக்குச் சென்றுவிட்டு தனது அறைக்குத் திரும்பிய சுமதி, உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர் களைக் காவலர்கள் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். கல்லூரிக்கு காவலர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
மாணவியின் உடலை மீட்டு, உடல்கூராய்வு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
காதல் விவகாரமா? மன உளைச்சலா? சக மாணவிகள் அல்லது கல்லூரி நிர்வாகத்துடன் தகராறு ஏற்பட்டதா? என பல கோணங்களில் மாணவியின் இறப்புக்கான காரணம் குறித்து திருவேற்காடு காவலர்கள் விசா ரித்து வருகின்றனர்.

