திருச்சி: நிறுத்தமுடியாமல் சென்று கொண்டிருந்த பேருந்தை ஒரு சுவரில் மோதி, பேருந்தை நிறுத்தி அதில் பயணம் செய்த 40 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர். அவரை பலரும் பாராட்டினர்.
திருச்சி மத்திய பேருந்து நிலை யத்தில் இருந்து 40க்கும் மேலான பயணிகளுடன் சென்று கொண்டி ருந்த அரசுப் பேருந்து, திருச்சி நீதிமன்றம் அருகே வந்தபோது, அதன் வேகத்தைக் குறைப்பதற்காக ஓட்டுநர் சகாய சவுரிமுத்து பிரேக்கை காலால் அழுத்தினார்.
ஆனால், பேருந்தின் வேகம் குறையாமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்ததை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
'பிரேக்' மீது ஏறி நின்று பார்த்தும் பேருந்து நிற்கவில்லை. பேருந்தில் பிரேக் செயலிழந்துவிட்டதையும் பேருந்தை நிறுத்த முடியவில்லை என்பதையும் அறிந்து பேருந்தின் முன் பகுதியில் அமர்ந்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து பேருந்து ஓடிக் கொண்டிருக்க, உயிரைக் கையில் பிடித்தவாறு பயணிகள் அமர்ந்தி ருந்தனர். இதற்கிடையே ஒருசிலர் பேருந்தில் இருந்து குதிக்க முயன்றனர். பலர் பேருந்தின் பின் பகுதிக்குச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில், ஓட்டுநர் சகாய சவுரிமுத்து, பயணிகளுக்கு பாது காப்பு அளிக்கவும், சாலையில் சென்று கொண்டிருப்போர் மீது மோதாமல் இருக்கும் வகையிலும் நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவின் சுவரில் மோதி பேருந்தை நிறுத்தினார். பலத்த காயம் அடைந்த இருவரையும் சிராய்ப்புக் காயம் அடைந்த மற்ற வர்களையும் திருச்சி அரசு மருத் துவமனையில் அனுமதித்தனர்.

