சேலம்: தமிழகத்தில் மது, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை முழுமையாகத் தடை செய்ய வலியுறுத்தி சேலம், ஆத்தூர், சென்ைனயில் பாமக வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியபோது, தமிழக மாணவர்களில் 10% பேர் போதைக்கு அடிமையாகி உள்ள தாகக் கூறினார்.
"தமிழகத்தில் ஒரு மாதத்தில் 80,000 கிலோ கஞ்சா விற்பனை யாவதாக காவலர்கள் கூறுகின்றனர்.
"என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்தால் இரண்டு நாள்களில் இதற்கு ஒரு முடிவு கட்டுவேன்," என்று அவர் கூறினார்.
இந்தியாவிலேயே அதிக அள வில் போதைப்பொருள்கள் விற்கும் மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் வழி, கடந்த ஆண்டில் போதைப் பழக்கத்துக்கு அடிமையான மாண வர்களின் எண்ணிக்கை ஒன்பது விழுக்காடாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் 10 விழுக்காடாக அதிகரித்துள்ளது ெதரியவந்துள் ளது என்று தெரிவித்தார்.
கடற்கரையில்
கரை ஒதுங்கிய கஞ்சா மூட்டைகள்
கடலூர் அருகே தம்மணாம்பேட்டை கடற்கரையில் இரண்டு சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கின. இதே பகுதியைச் சேர்ந்த காவலர்கள், சாக்குமூட்டைகளைக் கைப்பற்றி சோதனை நடத்தினர். மொத்தம் 28 பொட்டலங்களில் 56 கிலோ கஞ்சா போதைப்பொருள்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம்.
நாகப்பட்டினம், ராமேஸ்வரம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் இதுபோல் கஞ்சா பொட்டலம் அடிக்கடி கரை ஒதுங்கி வருவதால் காவலர்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

