தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் புகுந்த மழைநீர்; வெள்ளப்பெருக்கால் வாகன ஓட்டிகள் அவதி கனமழைக்கு நால்வர் பலி

2 mins read
160d05ba-5587-41ec-bad2-adaf17de920d
உடுமலையில் சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின்விநியோகம் தடைபட்டது. படம்: தமிழக ஊடகம் -

மதுரை: தமி­ழ­கத்­தில் திருப்­பூர், தஞ்­சா­வூர், மதுரை உள்­ளிட்ட பல்­வேறு மாவட்­டங்­க­ளி­லும் கன­மழை பெய்­த­தால் மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டது. மது­ரை­யில் இடி, கன­மழை பாதிப்பால் நால்­வர் உயி­ரி­ழந்­த­னர்.

தமி­ழ­கத்­தின் பல்­வேறு மாவட்­டங்களி­லும் தென்­மேற்­குப் பரு­வ­மழை கார­ண­மாக பர­வ­லாக கன­மழை பெய்து வரு­கிறது.

திருப்­பூர் மாவட்­டம், உடு­ம­லை­யில் சூறா­வ­ளிக்­காற்­று­டன் கன­மழை பெய்­தது. நெச­வா­ளர்­க­ளின் வீட்டுக் கூரை­கள் பலத்த காற்­றி­னால் தூக்கிவீசப்­பட்­டன.

சாலை­யில் வெள்­ளநீர் தேங்கிய தால் வாகன ஓட்­டி­கள் கடும் சிர­மத்­திற்கு ஆளா­கி­னர். ஆங்­காங்கே மின்­கம்­பங்­கள், மரங்­கள் சாய்ந்­த­தில் மின்­தடை ஏற்­பட்­டது.

மது­ரை­யி­லும் அதன் சுற்று வட்­டா­ரப் பகு­தி­க­ளி­லும் இடி, மின்­ன­லு­டன் கன­மழை பெய்­த­தால் வெள்­ளத்­தில் மாந­கரம் தத்­த­ளித்­தது.

மீனாட்சி அம்­மன் கோவி­லுக் குள்­ளும் மழை­நீர் புகுந்­தது. சுவாமி சன்­னிதி கொடி மரம் பகுதியில் தண்­ணீர் தேங்­கி­யது. கோவில் யானை பார்­வதி, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டது. கோயில் பணி­யா­ளர்­கள் தண்­ணீரை அப்­பு­றப்­ப­டுத்தினர்.

இதனிடையே, மதுரை, ஆண்­டாள்­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த ஒரு வீட்­டில், முரு­கன், ஜெக­தீ­சன் ஆகிய இருவரும் மின் மோட்­டார் அருகே அமர்ந்து தச்சுவேலை­யில் ஈடுபட்­டுக்­கொண்­டி­ருந்­த­போது, மின்­சா­ரம் தாக்கி உயி­ரி­ழந்­த­னர்.

அதே­போல், மதுரை மாந­க­ராட்சி அலு­வ­ல­கம் எதிரே, மழைக்­காக மரத்­த­டி­யில் ஒதுங்­கிய ஒரு தம்­ப­தி­யினர் உயி­ரி­ழந்­த­னர்.

கோவை, திண்­டுக்­கல் மாவட்­டங்­க­ளி­லும் மித­மான மழை பெய்­தது. நீல­கிரி மாவட்­டத்­தில் நீர்­நிலை­கள் நிரம்பி வழி­கின்­றன.

ேதனி மாவட்­டத்தில் உள்ள மஞ்­ச­ளாற்று அணையின் நீர்­மட்­டம் உச்ச அளவை எட்டியதால், இரண்­டாம் கட்ட வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. சென்­னை­யில் இரு நாள்க­ளுக்கு மித­மான மழை பெய்­யக்­கூ­டும் என வானிலை மையம் முன்னுரைத்­துள்­ளது. தஞ்­சா­வூர், திரு­வை­யாறு, வல்­லம், திருக்­காட்­டுப்­பள்ளி, கல்­லணை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் பெருகி ஓடி­யதால் குறுவை சாகு­படி செய்துள்ள விவ­சா­யி­கள் மகிழ்ச்சி அடைந்­துள்ளனர்.