ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி நடத்த பாஜக முயற்சி

ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி நடத்த பாஜக முயற்சி

1 mins read
de47ae29-d26c-4062-9b6e-9ddc04485d01
-

சென்னை: மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி நடத்த பாஜக முயற்சி செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோதச் சட்டங்களாக இருப்பதாகவும் ஒற்றை மொழி, ஒற்றை மதம், ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்க நினைப்பவர்கள் இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்க நினைப்பதாகவும் அவர் சாடினார்.

கேரள மாநிலம், திருச்சூரில் நடைபெற்ற கருத்தரங்கில், காணொளி வழி கலந்துகொண்டு முதல்வர் உரையாற்றினார்.

"மக்கள் ஒற்றுமையாக வாழ மொழிவாரியாக மாநிலங்களை உருவாக்கிக் கொடுத்தவர் ஜவஹர்லால் நேரு. இந்தி ஒருபோதும் திணிக்கப்படாது என்றும் அவர் உறுதி அளித்தார்.

"இந்தியாவில் பல மொழி பேசும், பல கலாசாரம் கொண்ட மக்கள் உள்ளனர். ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள்தான்," என்றார்.

"ஏனெனில், இந்தியாவில் பலவித மத வழிபாட்டு முறை கள் உள்ளன. இந்தியாவில் ஒற்றைப் பண்பாடு இல்லை. உணவு, உடை அனைத்திலும் ஆயிரம் வேறுபாடுகள் உள்ளன. இவ்வளவு வேற்றுமைகள் இருந்தாலும் ஒன்றாக நம்மை வாழவைப்பது அன்பும் மனிதநேயமும் மட்டும்தான்," என்றார்.