தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொதிக்கும் கூழ் பாத்திரத்தில் விழுந்தவர் மரணம்; பதைபதைக்கும் காணொளி

1 mins read
773a99b0-8152-4491-b68d-5b8e62af0628
-
multi-img1 of 2

இந்தியாவில் கொதிக்கும் கூழ் பாத்திரத்திற்குள் விழுந்த ஒருவர் உயிரிழந்தார். மதுரையில் கோவில் திருவிழாவுக்காக பெரிய பாத்திரங்களில் கூழ் காய்ச்சப்பட்டுகொண்டிருந்தன. கூழ் காய்ச்சும் பணியில் 52 வயதான முத்துக்குமரன் உள்ளிட்ட சிலர் ஈடுபட்டிருந்தனர்.

கூழ் கொதித்து கொண்டிருந்தபோது, பாத்திரத்துக்கு அருகே சென்ற முத்துக்குமரன் எதிர்பாராத விதமாக பாத்திரத்திற்குள் தடுக்கி விழுந்தார்.

பாத்திரத்தைவிட்டு அவரால் வெளியேற முடியாமல் தவித்தார். அருகில் நின்றவர்கள் அவரை மீட்க முயன்றனர். கொதிக்கும் கூழ் என்பதால் அவர்களால் பாத்திரத்துக்கு அருகில் செல்ல முடியவில்லை.

அடுப்பில் இருந்த பாத்திரத்தை கீழே கவிழ்த்தி முத்துக்குமரனை மீட்டனர். அவரது வயிறு உள்ளிட்ட பல உடல் பாகங்கள் வெந்த நிலையில், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜூலை 27ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தின் காணொளி தற்போது வெளியாகி உள்ளது. கூழ் பாத்தித்தில் விழுந்த முருகனை அங்கு கூடியிருந்தவர்கள் மீட்க முயற்சி செய்தும் சூடான கூழ் என்பதால் அவரை உடனடியாக மீட்க இயலாத நிலை ஏற்படுவது போன்ற நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. அருகில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் இந்தக் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தின் தொடர்பில் காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.