10,000 குறுங்காடுகளை உருவாக்கத் திட்டம்

1 mins read
6ab9502b-abc3-4dec-9c8a-589272b6f865
-

சென்னை: தமி­ழ­கத்­தில் பத்­தா­யிரம் குறுங்­கா­டு­களை உரு­வாக்­கும் திட்டத்தை அரசு செயல்­ப­டுத்த உள்­ளது.

சென்­னை­யில் நடை­பெற்ற சுற்­றுச்­சூ­ழல் தொடர்­பான மாநாட்­டில் கலந்­து­கொண்டு பேசிய தமி­ழக சுற்­றுச்­சூ­ழல் துறை அமைச்­சர் மெய்­ய­நா­தன், தற்­போது கால­நிலை மாற்­றத்­தால் அதிக பாதிப்­பு­கள் ஏற்­பட்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

கடந்த ஆண்­டு­களில் உல­கின் சரா­சரி வெப்­ப­நிலை 1.3 டிகிரி செல்­சி­யஸ் உயர்ந்­துள்­ளது என்­றும் அடுத்த பத்து ஆண்­டு­களில் 0.2 டிகிரி வரை வெப்­பம் உயர வாய்ப்­புள்­ளது என்­றும் அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார். அப்­போது பாதிப்பு­கள் கடு­மை­யாக இருக்­கும் என அவர் கவலை தெரி­வித்­தார்.

எனவே, கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைக்­க­வும் நெகிழிப் பொருள்­க­ளின் பயன்­பாட்­டைத் தடுத்து, அதிக மரங்­கள் வளர்க்­க­வும் தமி­ழக அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், தமி­ழ­கத்­தின் வனப்­ப­ரப்பு தற்­போது 22.71 விழுக்­கா­டாக உள்­ளது என்­றும் அடுத்த பத்­தாண்­டு­களில் இதை 33% ஆக உயர்த்­தும் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்த உள்­ள­தா­க­வும் கூறி­னார்.

"சுற்­றுச்­சூ­ழல் துறை சார்­பில், பெரு­நி­று­வன சமூ­கப் பொறுப்பு நிதி­யின் மூலம் 10 ஆயி­ரம் குறுங்­கா­டு­களை உரு­வாக்­கத் திட்­ட­மிடப்­பட்­டுள்­ளது. இத்­து­றை­யின் கீழ் 52 ஆயி­ரம் தொழிற்­சா­லை­கள் இயங்கி வரு­கின்­றன. அவற்­றின் மூலம் தலா 1,000 உள்­நாட்­டு ­ம­ரங்­க­ளைக் கொண்ட குறுங்­கா­டு­கள் உரு­வாக்­கப்­படும்," என்­றார் அமைச்­சர் மெய்­ய­நா­தன்.