தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.20,000 கோடி செலவில் பரந்தூரில் அமையவுள்ள இரண்டாவது விமான நிலையம் 3,000 ஏக்கர் நிலம், 1,000 வீடுகள் பாதிப்புறும் சூழலால் அதிர்ச்சி

2 mins read
e4409844-aea9-42b1-ac75-e999fee857e5
-

காஞ்­சி­பு­ரம்: சென்­னை­யின் இரண்­டா­வது அனைத்­து­லக விமான நிலை­யம் காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், பரந்­தூ­ரில் கட்­டப்­பட உள்­ளது.

இத­னால், இம்­மா­வட்­டத்­தில் உள்ள 3,000 ஏக்­கர் விளை­நி­லங்­களும் 1,000க்கும் மேலான குடி­யிருப்­பு­களும் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் உள்­ள­தாக விவ­சா­யி­கள் சங்­கத் தலை­வர்­கள், உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­கள், சமூக ஆர்­வ­லர்­கள் உட்­பட பல­ரும் வருத்­தம் தெரி­வித் துள்­ள­னர்.

"எங்­க­ளைப் பொறுத்­த­வரை இந்­தச் செய்தி மகிழ்ச்­சி­யான செய்­தி­யல்ல; அதிர்ச்­சி­யான செய்தி," என்று அங்கு வசிக்­கும் மக்­கள் கூறி­யுள்­ள­னர்.

பரந்­தூர் பகுதியில் இரண்­டா­வது அனைத்­து­லக விமான நிலை­யம் அமைக்­கப்­படும் என்று விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை இணை அமைச்­சர் வி.கே.சிங் கடந்த வாரம் நாடா­ளு­மன்­றத்­தில் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­தார்.

இந்­தப் புதிய விமான நிலை­யம் 4,971 ஏக்­க­ரில், ரூ.20,000 கோடி மதிப்­பீட்­டில், 10 கோடி பய­ணி ­க­ளைக் கையா­ளும் திற­னு­டன் அமைக்­கப்­பட உள்­ள­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், காஞ்­சி­பு­ரத்­தில் ஏரா­ள­மான விளைநிலங்­க­ளை­யும் குடி­யி­ருப்­பு­களையும் அழித்­து­விட்டு விமா­ன­நிலையத்தை உரு­வாக்­கு­வதன் மூலம் தங்களின் வாழ்­வாதா­ரமே கேள்­விக்குறி­யாகி விடும் என அப்­ப­குதி மக்­கள் வேதனை தெரி­வித்­துள்­ள­னர்.

இது­கு­றித்து தமி­ழக விவ­சா­யி­கள் சங்­கத்­தின் மாவட்­டச் செய­லர் கே.நேரு கூறு­கை­யில், "புதிய விமா­ன­நி­லை­யம் அமை­வதை ஒரு­பு­றம் வர­வேற்­கி­றோம். மறு­பு­றம், காஞ்­சி­பு­ரத்­தில் உள்ள வளத்­தூர், நெல்­வாய், பரந்­தூர், தண்­ட­லம், பொட­வூர், மடப்­பு­ரம் கிரா­மங்­க­ளி­லும் திருப்பெ­ரும்­பு­தூ­ரில் உள்ள இடை­யார்­பாக்­கம், ஏக­னா­பு­ரம், குண­கரம்­பாக்­கம், மகா­தேவி மங்­க­லம், அக்­கம்­மா­பு­ரம், சிங்­கில்­பாடி உள்­ளிட்ட கிரா­மங்­க­ளி­லும் உள்ள நிலங்­கள், குடியிருப்புகள் பாதிக்­கப்­படும். கைய­கப்­ப­டுத்­தும் இடத்­திற்குச் சந்தை மதிப்­பை­விடவும் மும்மடங்கு அதி­க­மாக மக்களிடம் இழப்­பீடு வழங்க­வேண்­டும்.

"1,000க்கும் மேற்­பட்ட குடி­யிருப்­பாளர்களுக்கு புதுவீடு கட்­டிக்­கொடுக்­கும்வரை அவர்­களை அங்கிருந்து போகச் சொல்லி நெருக்குதல் கொடுக்கக் கூடாது," என வலியுறுத்தி உள்ளார்.

"இங்கு வசிக்­கும் மக்­கள் விவ­சா­யத்தை நம்­பி வாழ்­கின்­ற­னர். ஏரா­ள­மான இளை­ஞர்­கள் படித்­துக்­கொண்டே விவ­சா­யப் பணியில் ஈடுபட்டு வரு­கின்­ற­னர். அவர்­க­ளது படிப்­பும் விவ­சா­ய­மும் பாழா­கி­விடும். ஊரை விட்டு துரத்தி­வி­டு­வார்­களோ என்ற அச்சத்துடன் கிரா­ம மக்­க­ள் பலரும் உள்ளனர். மக்­க­ளைப் பாதிக்­காத வகை­யில் விமான நிலை­யத்தைக் கட்ட­வேண்­டும்," என பரந்­தூர் ஊராட்சி மன்­றத் தலை­வர் கே.பல­ரா­மன் கூறி­யுள்­ளார்.