550 சவரன் தங்க நகையைத் திருடி காதலிக்கு பரிசளித்த தொழிலதிபர்

550 சவரன் தங்க நகையைத் திருடி காதலிக்கு பரிசளித்த தொழிலதிபர்

2 mins read
8903e2ab-c57e-4b59-a557-8504cc7e3ddf
சேகர், சுவாதி. படம்: ஊடகம் -

பூந்­த­மல்லி: சொந்த வீட்­டி­லேயே தன் மனைவி, தாயின் 550 சவ­ரன் தங்­க­ந­கை­க­ளைத் திருடி, அவற் றைக் காத­லிக்­குப் போட்டு அழகு பார்த்த தொழி­ல­தி­பர் அவ­ரது காத­லி­யு­டன் கைது செய்­யப்­பட்­டார்.

சென்­னையை அடுத்த பூந்த மல்லி, முத்­து­ந­க­ரைச் சேர்ந்­த­வர்­கள் சேகர், 40. இவ­ரு­டைய தம்பி ராஜேஷ், 37. திரு­ம­ண­மான இரு வரும் தாயு­டன் வசித்து வந்­த­னர்.

சேகர், பூந்­த­மல்­லி­யில் இனிப்­புக் கடை­யும் நிதி நிறு­வ­னத்­தை­யும் நடத்தி வரு­கின்­றார்.

இந்­நி­லை­யில், குடும்­பத் தக­ராறு கார­ண­மாக இரண்டு ஆண்­டு­களுக்கு முன்பு குடும்­பத்தை விட்­டுப் பிரிந்துசென்ற சேக­ரின் மனைவி, அண்­மை­யில் மீண்­டும் கண­வர் வீட்­டுக்­குத் திரும்பி வந்­தார். தனது பீரோ­வில் தான் வைத்­தி­ருந்த 300 பவுன் நகைகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்­தார்.

சேக­ரின் தாயார் வைத்­தி­ருந்த 200 பவுன் நகை­கள், 5 தங்­கக் கட்­டி­கள், தம்­பி­ மனைவியின் நகை­கள் என 550 பவுன் நகை­கள் காணா­மல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்­பத்­தி­னர் பூந்தமல்லி காவல்­நி­லை­யத்­தில் புகார் செய்­த­னர்.

விசா­ர­ணை­யில், தங்­க­க்கட்­டி­கள் உட்­பட 550 சவ­ரன் தங்க நகை­களைத் திருடி தனது காதலியான வேளச்­சே­ரி­யைச் சேர்ந்த சுவா­தி­யி­டம், 22, கொடுத்­ததை சேகர் ஒப்புக் கொண்டார்.

விசா­ர­ணை­யில், எப்­போ­தும் நவீன ஆடை­க­ளு­டன் தோன்­றும் சுவா­தி­யின் பேச்­சி­லும் அழ­கி­லும் மயங்­கிய சேகர், அவர் கேட்­கும் போதெல்­லாம் நகையை வாங்கி பரி­சா­கக் கொடுத்­துள்­ளார். சொகுசு கார் ஒன்­றை­யும் வாங்­கிக் கொடுத்­துள்­ளார்.

ஏற்­கெ­னவே திரு­ம­ண­மாகி குழந்தை உள்ள நிலை­யில், கண­வ­ரைப் பிரிந்து வாழ்ந்து வந்­தார் சுவா­தி­. இதனை எல்­லாம் சேக­ரி­டம் சுவாதி மறைத்து­விட்­டார். சுவா­தி­யி­டம் இருந்து சொகுசு கார் மீட்கப்பட்டது. விசாரணை நடக்கிறது.