ஸ்டாலின்: போதைப்பொருள் விற்றால் சொத்துகள் முடக்கம்

சென்னை: போதைப்பொருள்களை விற்பனை செய்பவர்களைக் கைது செய்து, அவர்களின் சொத்துகளை முடக்கவேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

"பொதுவாக அனைத்துத் துறை களிலும் முன்னேற்றம் கண்டுவரும் தமிழ்நாடு, போதைப்பொருள் போன்ற சமூகத்தைச் சீரழிக்கும் எதிர்மறையான விஷயங்களிலும் வளர்ந்துவிடக் கூடாது," என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாள் ஆகஸ்ட் 11ல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர் களுடன் முதல்வர் நேற்று ஆலோ சனை நடத்தினார்.

அப்போது பேசிய முதல்வர், தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருள் புழக்கம் அதி கரித்து வருவது கவலையளிப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர், "போதை என்பது அதனைப் பயன்படுத்தும் தனிநபர் பிரச்சினை மட்டுமல்ல; இது ஒரு சமூகப் பிரச்சினை," என்றும் கூறினார்.

"இந்தப் போதைப்பொருள்கள் நம் மாநிலத்துக்குள் நுழைவதை, பரவுவதை, விற்பனையாவதை தடுத்தாகவேண்டும். இதற்கு அடிமையானவர்களை மீட்டு நல் வழிப்படுத்தவேண்டும். இனி புதிதாக ஒருவர்கூட இப்போதைப் பொருள் பக்கம் சாயாமல் இளைஞர் சமுதாயத்தை பாதுகாத்திட வேண்டும். இதற்கு கூட்டு முயற்சி அவசியம்," என்று தெரிவித்தார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள்கள் விற்கப்பட வில்லை என்பதை உறுதிப்படுத்து வது மிகவும் முக்கியம் என்று கூறிய முதல்வர், "இப்போதைப் பொருள்களே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கும் தூண்டு கோலாக அமைந்துவிடுகின்றன.

"இந்த சமூகத் தீமையை நாம் அனைவரும் சேர்ந்து தடுத்தால்தான் போதைப்பொருள் இல்லாத மாநில மாகத் தமிழ்நாட்டை ஆக்கமுடியும்.

"அதுமட்டுமன்றி தங்கள் குழந்தைகள் போதைப்பொருள்களை நாடுகிறார்களா என்பதை பெற்றோர் கண்காணிக்கவேண்டும்," என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில் போதைப்புழக்கம் குறைவு என்றாலும் அதற்காக இதை நினைத்து சமாதானம் அடையமுடியாது. எல்லாவற்றிலும் வளர்ந்து வரும் தமிழ்நாடு போதை போன்ற எதிர்மறையான விஷயங்களிலும் வளர்ந்துவிடக் கூடாது; வளரவிட்டுவிடவும் கூடாது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!