சென்னை மாமல்லபுரம் மீண்டும் களைகட்டுகிறது. அடுத்து காற்றாடி திருவிழா

2 mins read
529b4a42-d7fb-4405-85cc-9b9c6773b341
2018 ஜனவரி 8ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற எட்டு நாள் காற்றாடி திருவிழாவின் 2வது நாளில் வித்தியாசமான பல காற்றாடிகள் பறக்கவிடப்பட்டன. கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

சென்னை: சென்னை மாமல்லபுரத்­தில் உலக செஸ் ஒலிம்­பி­யாட் விளை­யாட்டு வெற்­றி­க­ர­மாக நடந்து முடிந்­துள்­ளது. இந்த நிலை­யில் அடுத்து காற்­றாடி திரு­விழா நடை­பெ­ற­வுள்­ளது.

தமி­ழக சுற்­று­லாத் துறை பங்­க­ளிப்­பு­டன் மாமல்­ல­பு­ரம் கட­லோ­ரப் பகு­தி­யில் அனைத்­து­லக காற்­றாடி திரு­வி­ழா மூன்று நாள்­கள் நடக்­கிறது.

தமி­ழ­கத்­தில் காற்­றாடி திரு­விழா முதல் முறை­யாக நடப்­ப­தால் ஏற்­பா­டு­கள் மும்­மு­ர­மாக செய்­யப்­பட்டு வரு­கின்றன.

மாமல்­ல­பு­ரத்­தில், கி.பி. 7- 8ஆம் நுாற்றாண்டு பல்­ல­வர் கால கலைச்­சின்­னங்­கள் கம்­பீ­ர­மாக வீற்­றுள்­ளன.

பிர­த­மர் மோடி-சீன அதி­பர் ஸி ஜின்­பிங் ஆகி­யோர் 2019ஆம் ஆண்டில் இங்கு சந்­தித்­த­போது, மாமல்­ல­பு­ரம் உலக நாடு­க­ளின் கவ­னத்தை ஈர்த்­தது.

பண்­டைய தமி­ழக-சீன தொடர்பை அறிந்து வெளி­நாட்­டுப் பய­ணி­யர் இங்கு சுற்­று­லா­விற்­குக் குவிந்­த­னர்.

மற்றோர் உல­கக் கவன ஈர்ப்பு நிகழ்­வாக 44வது அனைத்­து­லக செஸ் ஒலிம்­பி­யாட் போட்டி ஜூலை 29ஆம் தொடங்கி சென்ற செவ்­வாய்க்கிழமை நிறை­வ­டைந்­தது.

இத­னால் இப்­ப­கு­தியை அறி­யாத பல வெளி­நாட்­ட­வ­ர் அறிந்து வியந்­த­னர்.

இந்த நிலை­யில் மற்­றொரு நிகழ்­வாக, அனைத்­து­லக காற்­றாடி திரு­வி­ழா­வும் மாமல்­ல­பு­ரத்­தில் நடக்­க­வுள்­ளது.

குளோ­பல் மீடியா பாக்ஸ் நிறு­வ­னம், தமி­ழக சுற்­று­லாத் துறை­யு­டன் சேர்ந்து சனிக்­கி­ழமை தொடங்கி ஆகஸ்ட் 15 வரை இவ்­வி­ழாவை நடத்­து­கிறது.

சென்னை, பொள்­ளாச்சி பகுதி களில், வெப்­பக் காற்று பலுான் விழாவை ஆண்­டு­தோ­றும் நடத்­தும் நிறு­வ­னம், தமி­ழ­கத்­தில் முதல் முறை­யாக மாமல்­ல­பு­ரத்­தில் அனைத்­து­லக காற்­றாடி திரு விழாவை நடத்­து­கிறது.

இந்த காற்­றாடி திரு­வி­ழா­வில் இந்­தியா, அமெ­ரிக்கா, சிங்­கப்­பூர், மலே­சியா, தாய்­லாந்து உள்­ளிட்ட நாடு­க­ளைச் சேர்ந்த 80 காற்­றாடி கலை­ஞர்­கள், பிர­ம்மாண்ட வண்­ணக் காற்­றா­டி­கள் பறக்க விடு­கின்­ற­னர் என்று தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமி­ழ­கக் கலா­சா­ரம் கருதி, மாமல்­ல­பு­ரம் கடற்­கரை கோவில், திரு­வள்­ளு­வர் உரு­வம், ரசி­கர்­களை கவ­ரும் யானை, குதிரை உள்­ளிட்ட விலங்­கு­கள், பற­வை­கள், கார்ட்­டூன் வடி­வங்­களில் காற்­றா­டி­கள் பறக்­க­வி­டப்­பட உள்­ளன. வான்­கு­டை­யில் பயன்­ப­டுத்­தும் நைலா­னில் தயா­ரிக்­கப்­பட்ட மூன்று அடி முதல் 20 அடி உய­ர காற்­றா­டி­களும் பறக்க விடப்­படும்.

அனைத்­து­லக காற்­றாடி விழாவை­யொட்டி மூன்று நாள்­கள் இர­வில் அரங்­கங்­களில் பல்­வேறு வித்­தி­யா­ச­மான உணவு வகை­கள் விற்­கப்­படும். இசை நிகழ்ச்சி, காற்­றாடி செய்­முறை விளக்­கம் போன்­ற­வற்­றுக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

பெரி­ய­வர்­க­ளுக்கு நுழை­வுக் கட்­ட­ணம் ரூ.150, சிறு­வர்­க­ளுக்கு இல­வ­சம்.

மேல் விவ­ரங்­கள் www.tnikf.com என்ற இணை­யத் தளத்­தில் இடம்­பெற்­றுள்­ளன.