சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் தவறு இல்லை என்றும் யார் வேண்டு மானாலும் ஆளுநரைச் சந்தித்து அரசியல் பேசலாம் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்தான் ஆளுநரை நியமித்துள்ளனர். பிறகு, ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்றும் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
"அரசியல் என்பது ஒரு வாழ்வியல். அனைத்து இடங்களிலும் அரசியல் பேசவேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறும். மனிதனின் உரிமைக்காகப் பேசும் அனைத்தும் அரசியல்தான். அந்த உரிமை ரஜினிக்கு இருக்கிறது," என்று சீமான் கூறியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தனது முழு பலத்தையும் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் அதில் ஒரு கருவியாக தென்னிந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

