250 படகுகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற படகுப் பேரணி

250 படகுகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற படகுப் பேரணி

1 mins read
c7805ab6-a16f-411e-85a9-4619c0e33605
-

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு, சென்னை, நீலாங்கரை கடற்கரைப் பகுதியில் பாஜக மீனவர் பிரிவினர், தமிழக மீனவர் அமைப்பினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூவர்ண தேசிய கொடிகள் கட்டப் பட்ட 250 விசைப்படகுகளுடன் மாபெரும் படகுப் பேரணியில் பங்கேற்றனர். ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி மக்களை வலியுறுத்தியுள்ள நிலையில், தேசப்பற்று உணர்வை போற்றும் வகையில் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க சென்னை மாநகராட்சியும் கேட்டுக்கொண்டுள்ளது.

படம்: இபிஏ