சென்னை: மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் தங்களது தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
சிவாஜி சம்பாதித்த 270 கோடி சொத்துகளைத் தனது சகோதரர்கள் பிரபு, ராம்குமார் ஆகியோர் சரியாகப் பராமரிக்கவில்லை. பலவற்றையும் விற்று எங்களை மோசடி செய்து விட்டனர்.
தங்க நகைகள், சாந்தி திரை யரங்கப் பங்குகளையும் அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்டனர்.
தந்தையின் சொத்தில் எங்க ளுக்கும் பங்கு தர உத்தரவிட வேண்டும். சொத்து விற்றது செல்லாதது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவுபெற்றன. தீர்ப்பை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

