தமிழக நிதியமைச்சர் கார் மீது பாஜகவினர் காலணி வீச்சு

தமிழக நிதியமைச்சர் கார் மீது பாஜகவினர் காலணி வீச்சு

1 mins read
fa9b884d-8b1c-4f14-994e-38e1c86b52cf
-

மதுரை: மதுரை விமான நிலை­யத்­தில் ராணுவ வீரர் லட்­சு­ம­ண­னின் உட­லுக்கு அஞ்­சலி செலுத்­தி­விட்டு புறப்­பட்ட தமி­ழக நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியாகராஜன் கார் மீது பாஜ­க­வி­னர் கால­ணி­யைத் தூக்கி வீசி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இந்­தச் சம்­ப­வம் குறித்த காணொ­ளி­களும் வெளி­யாகி உள்­ளன.

ஜம்மு-காஷ்­மீர் மாநி­லத்­தில் பயங்­க­ர­வா­தி­க­ளோடு நடை­பெற்ற சண்­டை­யில் மதுரை நக­ரைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்­சு­ம­ணன், 24, வீர­ம­ர­ணம் அடைந்­தார்.

இவ­ரது உடல் இரு நாட்­க­ளுக்­குப் பிறகு நேற்று மதுரை விமான நிலை­யம் வந்து சேர்ந்­தது.

லட்சுமணன் உட­லுக்கு அமைச்­சர் பிடி­ஆர் பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன் அஞ்­சலி செலுத்­தி­விட்டு காரில் புறப்­பட்­டுள்­ளார். அப்­போது அங்கிருந்த பாஜ­க­வி­னர் அவ­ரது கார்­மீது செருப்பை வீசித் தாக்­கி­யுள்­ள­னர். அவர்­களில் இரு பெண்­களும் இருந்­துள்­ள­னர்.

அர­சின் சார்­பாக அஞ்­சலி செலுத்­திய பின்­னரே, பாஜ­க­வி­னர் அஞ்­சலி செலுத்­த­வேண்­டும் என்று கூறி­ய­தால் பிரச்­சினை ஏற்­பட்­ட­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

நாட்­டுக்­காகத் தனது உயி­ரைத் தியா­கம் செய்­துள்ள ஒரு ராணுவ வீர­ரின் உடலுக்கு அமை­தி­யாக இறுதி அஞ்­சலி செலுத்­திவிட்டுச் செல்­வதை விட்டுவிட்டு, இப்­படி இரு கட்­சி­யி­ன­ரும் சாலையில் சண்டை போட்­டுக்­கொண்டு நிலை மையை மோச­மாக்­கி­யது குறித்து சமூக ஆர்­வ­லர்­கள் வேதனை தெரிவித்­துள்­ள­னர்.