ரூ.100 கோடி போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலைய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், ஒரு பயணியிடம் இருந்து ஒரே சமயத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான 9 கிலோ 590 கிராம் ஹொக்கைன், ஹெராயின் போதைப்பொருள்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையம் 1932ஆம் ஆண்டு உருவான பின்னர், ஒரே நப­ரி­டம் இருந்து இந்த அள­வுக்கு போதைப்­பொருள்கள் சிக்கியது என்­பது இதுவே முதல்­முறை என்றும் அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

எத்­தி­யோப்­பி­யா நாட்டின் அடீஸ் அபாபா நகரிலிருந்து சென்னைக்கு வந்த விமானப் பயணிகளை அதி காரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, இக்­பால் பாஷா, 38, என்­ப­வர் முன்­னுக்­குப் பின் முர­ணா­கப் பதி­ல­ளித்­தார். அவ­ரைத் தனி அறைக்கு அழைத்­துச் சென்று பரி­சோ­தித்­த­போது, கால­ணி­கள், உள்­ளா­டை­கள், அவரது ‘கோட்’ ஆடையில் இருந்த ரக­சியப் பாக்­கெட்­டு­களில் போதைப்­பொ­ருள் களை மறைத்து வைத்து கடத்தி வந்­தது தெரியவந்­தது. இக்­பாலை கைது செய்து அதி­காரிகள் விசா­ரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில், பேங்­காக்­கில் இருந்து சென்னைக்கு வந்த தாய் விமா­னத்­தில் 15 ராஜ நாகம், இரு ஆமைகள், ஒரு குரங்கு ஆகியவற்றை ஒரு பய­ணி­யி­டம் இருந்து பறிமுதல் செய்து, மீண்­டும் அவற்றை பேங்காக்­கிற்கே அதி­கா­ரி­கள் திருப்பி அனுப்­பி­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!