பெண்கள் சொந்தக்காலில் நிற்கவேண்டும்: ஸ்டாலின்

சென்னை: பெண் குழந்­தை­கள் படிப்­பில் கவ­னம் செலுத்­து­வ­து­டன் பொரு­ளா­தார ரீதி­யாக சொந்­தக் காலில் நிற்­பதற்குத் தங்­க­ளைத் தாங்­களே தயார்ப்­ப­டுத்­திக் கொள்ள ­வேண்­டும் என ஒரு தந்­தை­யாக, தான் கேட்­டுக்­கொள்­வ­தாக முதல்­வர் ஸ்டா­லின் கூறி­யுள்­ளார்.

சென்னை கொளத்­தூர் கபா லீஸ்­வ­ரர் கலை, அறி­வி­யல் கல்­லூ­ரி­யில் நேற்று நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் முதல்­வர் கலந்­து­கொண்டு பேசி­­னார்.

"கல்­விக்­கா­க­வும் மருத்­து­வத்­துக்காக­வும் செலவு செய்­வது என்­பது இல­வ­சம் ஆகாது. ஏனெ­னில், ஒன்று அறிவு நலம் சார்ந்­தது, மற்­றது உடல் நலம் சார்ந்­தது என்­ப­தால் இவை­யெல்­லாம் சமூக நலத்­திட்­டங்­கள்," எனக் குறிப்­பிட்டார்.

"மாநி­லம் முழு­வ­தும் சுற்­றிச் சுழன்று வந்­தா­லும்­கூட எனது சொந்­தத் தொகு­தி­யான கொளத் தூருக்கு வரு­வது என்­பது அலாதி யானது. இந்­தக் கபா­லீஸ்­வ­ரர் கல்­லூரி எனது தொகு­தி­யில் அமைந் திருப்­ப­தில் பெரு­ம­கிழ்ச்சி.

"மாணவர்கள் தங்களது தனித்­தி­ற­மை­களை வளர்த்­துக்­கொள்ள வேண்டும். நீங்­கள் அனை­வ­ரும் ஒரே ஒரு பட்­டத்­து­டன் நிறுத்­திக்­கொள்ளாதீர்­கள். உயர்­கல்­வி­யைத் தொட­ருங்­கள். பட்­டம் பெற்ற பெண்­கள் தகு­திக்­கேற்ற பணி­க­ளைத் தெரிவு செய்­யுங்­கள். பொரு­ளா­தார ரீதி­யாக சொந்­தக்­கா­லில் நிற்­க­வேண்­டும்," என்று தந்­தை­யாக கேட்­டுக்­கொள்­கி­றேன் என்­றார்.

கல்வி என்­பது அனை­வ­ருக்­கும் எளி­தாக கிடைக்கவேண்­டும் என்ற உண்­மை­யான அக்­க­றை­யின் கார­ண­மாகவே தமி­ழக அரசு பல்­வேறு நலத்­திட்ட உத­வி­களையும் செயல்­படுத்தி வரு­வதாகவும் முதல்­வர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!