நாளை 15ஆம் தேதி இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப் பட உள்ளது. இதனை முன்னிட்டு, 600 அடி நீளம், 9 அடி அகலத்தில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேசிய கொடியை ஆயிரம் பேர் ஊர்வலமாகத் தூக்கிச் சென்றனர். மேட்டூர் பேருந்து நிலையம், காந்தி சிலை, சின்னப் பூங்கா, நான்கு சாலை வழியாகச் சென்று ஆட்சியர் அலுவலகத்தை ஊர்வலம் வந்தடைந்தது.
தேசப்பற்று, தேசிய கொடி பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே இந்த ஊர்வலம் நடைபெற்றதாக ஓய்வு பெற்ற ராணுவவீரர்கள் கூறினர்.
படம்: தமிழக ஊடகம்

