தண்டோரா போடுவதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகள்

தண்டோரா போடுவதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகள்

1 mins read
937b8f5a-2cd8-4b97-860d-906a03d4807e
-

சென்னை: அர­சின் முக்­கிய உத் தர­வு­க­ளைத் தண்­டோரோ போட்டு மக்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தும் முறைக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், இதனை மீறு­பவர்­கள்மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தலை­மைச் செய­லா­ளர் இறை­யன்பு தெரி­வித்­துள்­ளார்.

அவர் வெளி­யிட்­டுள்ள அறிக் கையில், தண்­டோரா போடு­வதற்கு மாற்று ஏற்­பா­டாக, வாக­னங்­களில் ஒலி­பெ­ருக்­கி­க­ளைக் கொண்டு மாநி­லத்­தின் கிரா­மப்­புறங்­களில் அறிவிப்புகளைச் செய்யலாம். இதன்­மூ­லம் அர­சின் முக்­கி­யச் செய்­தி­களை விரை­வாக மக்­க­ளிடம் கொண்டு சேர்க்­க­மு­டி­யும்.

ஏற்­கெ­னவே இத்தண்­டோரா போடும் பணி­யில் ஊழியர்கள் யாரே­னும் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந் தால், அவர்­க­ளுக்கு மாற்று ஏற்­பா­டு­கள் செய்­து­கொடுப்­பதை ஊரக வளர்ச்சி, உள்­ளாட்­சித்­துறை அமைப்­பு­கள் உறுதி செய்­ய­வேண்­டும் எனவும் அவர் கூறியுள்­ளார்.