வங்கியில் 32 கிலோ நகைகள் கொள்ளை; வங்கி ஊழியரைத் தேடுகிறது காவல்துறை

சென்னை: சென்னை வங்­கி­யில் 32 கிலோ தங்­கம் கொள்­ளை­ யடிக்கப்­பட்ட சம்­ப­வத்­தில் வங்கி ஊழி­ய­ரான முரு­கன் என்­ப­வரை காவ­லர்­கள் தேடி வரு­கின்­ற­னர்.

அரும்­பாக்­கம் ரசாக் கார்­டன் ரோட்­டில் உள்ள தனி­யார் வங்­கி­யான ஃபெட­ரல் வங்­கி­யில் ஞாயிறு பட்­டப்பக­லில் ஊழி­யர்­களைக் கட்டிப் ­போட்டு 32 கிலோ நகை­களை கொள்­ளை­யர்­கள் எடுத்­துச் சென்­ற­னர். இதன் மதிப்பு 20 கோடி ரூபாய் (S$ 3,443,601).

இவற்றை மீட்க காவல்­துறை தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது. கொள்­ளை­யர்­கள் அறி­மு­க­மா­ன­வர்­கள் என நம்­பப்­ப­டு­கிறது. இதே வங்­கி­யில் வில்­லி­வாக்­கம் கிளை­யில் வேலை பார்க்­கும் முரு­கன் என்ற ஊழி­யர் தலை­மை­யில் கொள்ளை நடந்­தி­ருக் ­க­லாம் என காவல்­துறை சந்­தே­கிக்­கிறது.

முரு­கன் பாடி­யைச் சேர்ந்­த­வர். தனிப்­படை காவல்­து­றை­யி­னர் முரு­க­னின் வீட்­டுக்­குச் சென்­ற­போது அங்கு அவர் இல்லை.

இதை­ய­டுத்து முரு­க­னின் இருப்­பி­டம், அவர் யாரு­டன் தொடர்பு கொண்­டார் என காவல்­து­றை­யி­னர் விசா­ரித்­த­னர். குடும்­பத்­தி­னர் மற்றும் உற­வி­னர்­க­ளி­டம் சேக­ரித்த தக­வலை வைத்து காவல்­துறை முரு­கனைத் தேடி வரு­கிறது.

அவரது உற­வி­னர் பாலாஜி என்­ப­வ­ருக்­கும் இந்­தக் கொள்­ளை­யில் தொடர்பு இருப்­ப­தாக சந்­தே­கம் ஏற்­பட்டுள்ளது. இத­னால் பாலாஜியை காவல்­துறை விசா­ரித்து, அவர் கொடுத்த தக­வ­லின்­படி தனிப்­படை ஒன்று திரு­வண்­ணா­ம­லைக்கு விரைந்­துள்­ளது.

இது­வரை ஆறு பேரை காவல்­து­றை­யி­னர் விசா­ரணை வளை­யத்­துக்­குள் கொண்டு வந்­துள்­ள­னர்.

அவர்­க­ளி­டம் நடத்­திய விசா­ர­ணை­யில் காவல்­து­றைக்கு சில ரக­சிய தக­வல்­கள் கிடைத்­துள்­ளன. எனவே கொள்­ளைக் கும்­பல் விரை­வில் பிடி­ப­ட­லாம் எனக் கூறப்­ப­டு­கிறது.

கொள்­ளை­யர்­கள் வங்­கிக்­குள் புகுந்­தது எப்­படி என விசா­ரித்­த­போது, பணி­யில் இருந்த காவ­லாளி சர­வ­ணன் என்­ப­வ­ருக்கு முரு­கன் குளிர்­பா­னம் வாங்கிக் கொடுத்­த­தா­க­வும் அதை குடித்­த­தும் அவர் மயங்கி விட்­ட­தா­க­வும் அதன் பிறகே கொள்­ளை­யர்­கள் வங்­கிக்­குள் புகுந்த­தா­க­வும் தெரிய வரு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!