பிரதமர் மோடியைச் சந்திக்க டெல்லி புறப்படும் ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்திக்க டெல்லி புறப்படும் ஸ்டாலின்

1 mins read
5fe8a9db-5572-405d-9846-017308c8d319
-

சென்னை: பிர­த­மர் மோடி­யைச் சந்­திப்­ப­தற்­காக தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டா­லின் டெல்லி செல்­ல­வி­ருக்­கி­றார்.

தமி­ழக சட்­ட­ச­பை­யில் நிறை­வேற்­றப்­பட்ட பல சட்ட மசோ­தாக்­ க­ளுக்கு ஆளு­நர் ஆர்.என்.ரவி இன்­னும் ஒப்­பு­தல் அளிக்­கா­மல் நிலு­வை­யில் வைத்­துள்­ளார். இதன் தொடர்­பில் ஆளு­நரை அறி­வு­றுத்த வேண்­டும் என்று பிர­த­ம­ரி­டம் மு.க.ஸ்டா­லின் வலி­யு­றுத்­து­வார் என அதி­கா­ரி­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சென்னை உலக செஸ் ஒலிம்­பி­யாட் போட்டி தொடக்க விழா­வில் பிர­த­மர் மோடி பங்­கேற்­ற­து­டன் அப்­போ­ட்டியை வெற்­றி­க­ர­மாக நடத்­தி­ய­தற்காக தமி­ழக அரசை பாராட்­டி­யி­ருந்­தார்.

இதற்கு மு.க. ஸ்டா­லி­னும் நன்றி தெரி­வித்­துக்கொண்­டார்.

இதை­ய­டுத்து பிர­த­மர் மோடிக்­கும் முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னுக்­கும் இடையே இப்­போது அர­சாங்க பணி­களில் இணைக்­க­மான சூழல் உரு­வாகி வரு­வ­தாக அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கருத்து தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

இந்­தச் சூழ­லில் இம்­மா­தம் 16ஆம் தேதி (நாளை) முதல்­வர் மு.க.ஸ்டா­லின் டெல்­லி செல்­ல­வி­ருக்­கி­றார்.

இதற்­காக நேரம் ஒதுக்­கித் தரும்­படி பிர­த­மர் அலு­வ­ல­கத்­தி­டம் கேட்­டுக்கொள்­ளப்­பட்­டுள்­ளது. பிர­தம­ரு­ட­னான சந்­திப்­பில் ஆளு­ந­ரி­டம் நிலு­வை­யில் தமி­ழக சட்­ட­ ச­பை­யில் நிறை­வேற்­றப்­பட்ட பல சட்ட மசோ­தாக்­கள் குறித்து முதல்­வர் பேசு­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.