அடுப்பு இல்லாமல் ஒரே நேரத்தில் உணவு வகைகளைத் தயாரித்து மாணவர்கள் சாதனை

அடுப்பு இல்லாமல் ஒரே நேரத்தில் உணவு வகைகளைத் தயாரித்து மாணவர்கள் சாதனை

1 mins read
8939cbf5-0501-45b8-b593-a59d71573586
-

சென்னை: சென்­னை­யில் நடை­பெற்று வரும் உணவு விழா­வில் அடுப்பு இல்லா சமை­யல் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற 1,100 மாண­வர்­கள் ஒரே நேரத்­தில் பல்­வேறு உண­வு­ வகைக­ளைத் தயா­ரித்து உலக சாதனை படைத்­துள்­ள­னர்.

சென்னை தீவுத்­தி­ட­லில் வெள்ளிக்­கி­ழ­மை­யி­லி­ருந்து மூன்று நாள்­க­ளாக உணவு திரு­விழா நடை­பெற்று வரு­கிறது.

தமி­ழக உணவு பாது­காப்­புத்­துறை ஆத­ர­வு­டன் நடை­பெற்ற உணவுத் திரு­வி­ழா­வில் இரண்­டா­வது நாளான நேற்று நொறுக்­குத்­தீ­னி­க­ளுக்குப் பதி­லாக சத்­தான உண­வு­களை தாமா­கவே தயா­ரிக்­கும் வித­மாக அடுப்­பில்லா சமை­யல் என்ற பெய­ரில் பல்­வேறு உணவு வகை­களைத் தயா­ரிக்­கும் நிகழ்ச்சி நடை­பெற்­றது. இதில் 1,100 மாணவ, மாண­வி­கள் பங்­கேற்­ற­னர்.

அவர்­க­ளுக்கு சிறு­தா­னிய உருண்டை, ஃபுருட் சாலட், மசாலா பயிறு போன்ற பத்து வகை­யான உணவு வகைகளைத் தயா­ரிக்க பயிற்சி வழங்­கப்­பட்­டது.

பின்­னர் மாண­வர்­களே தின்­பண்­டங்­களைச் செய்து அசத்­தி­னர். 1,100 மாண­வர்­கள் ஒரே சமயத்தில் தயாரித்த உணவு நிகழ்ச்சி புதிய சாத­னை­யா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

இந்த உண­வுத் திரு­வி­ழா­வில் பாரம்­ப­ரிய உணவு வகை­களை வெளிப்­ப­டுத்­தும் வித­மாக 150 அரங்­கு­கள் அமைக்­கப்­பட்டு இருந்­தன.

உணவு வீணா­கு­வதை தடுக்க வேண்­டிய வழி­மு­றை­கள், எந்த வகை உண­வு­களைச் சாப்­பி­டு­வது நல்­லது என்­பது உள்­ளிட்ட பல்­வேறு தக­வல்­களும் இங்கு எடுத்­து­ரைக்­க ­ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

பாரம்­ப­ரிய உணவு வகை­கள், உணவு சார்ந்த போட்­டி­கள், கலை­நி­கழ்ச்­சி­கள், உண­வுப் பாது­காப்பு குறித்த விழிப்­பு­ணர்வு நடைப­ய­ணம் ஆகி­யவை உணவு விழா­வில் இடம்­பெற்­றன. நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.