27,394 அரிசியால் சிறுவன் தீட்டிய இந்திய வரைபடம்

27,394 அரிசியால் சிறுவன் தீட்டிய இந்திய வரைபடம்

1 mins read
7cceaca8-1207-4974-ab38-3547cb15991c
நாடு சுதந்திரம் அடைந்து 27,394 நாள்கள் ஆகியுள்ளதை அரிசியைக்கொண்டு ஓவியம் தீட்டியுள்ள கனிஷ். படம்: ஊடகம் -

கோவை: இந்­திய நாட்­டின் 75வது சுதந்­திர தினத்தை ஐந்­தாம் வகுப்­பில் படித்து வரும் கனிஷ் என்ற மாண­வன், வித்­தி­யா­ச­மா­கக் கொண்­டா­டி­யுள்­ளார்.

மொத்­தம் 27,394 அரி­சி­க­ளைப் பயன்­ப­டுத்தி, இந்­திய வரை ­ப­டத்தை இவர் ஓவி­ய­மாக வடித்­துள்­ளார்.

கோவை, புது சித்­தா­பு­துார் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் கண்­ணன்- சிஜி தம்­ப­தி­யர். இவர்­களது மகன் கனிஷ்.

சிறுவன் கனிஷ் கூறு­கை­யில், "குழந்­தைப் பரு­வம் முதலே ஓவி­யத்­தில் அதிக ஆர்­வம் காட்டி வரு­கிறேன். நாட்­டின் 75வது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு, புது­மை­யான முறை­யில் ஓவி­யம் படைக்க விரும்­பி­னேன். மக்­க­ளுக்கு நாடு சுதந்­தி­ரம் அடைந்து எத்­தனை ஆண்­டு­கள் ஆகின்­றன என்­பது நன்கு தெரி­யும். ஆனால், இந்தச் சுதந்­திர தினத்­தோடு சேர்த்து எத்­தனை நாள்­கள் ஆகின்­றன என்­பது தெரி­யாது. அந்த மொத்த நாள்­க­ளைக் குறிப் பிடும் வகை­யில் 27,394 அரி­சி­ க­ளைப் பயன்­ப­டுத்தி, மூவர்­ணங் ­க­ளைச் சேர்த்து, இந்­திய வரை­படத்தை உரு­வாக்­கி­யுள்­ளேன்," என்றார்.