அமெரிக்காவில் மன்னார்குடி கோயில் சிலைகள்

திருவாருர்: மன்னார்குடி கோவிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன மூன்று சாமி சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவாருர் மாவட்டம், மன்னார் குடியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் இருந்து விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய பழங்காலச் சிலைகள் கொள்ளை போனது குறித்து கடந்த 2017ல் மீண்டும் புகார் அளிக்கப்பட்டு, சிலைகளை மீட்டுத் தரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.

இப்போது, அந்தச் சிலைகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத் தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சிலைகளை மீட்பதற்காக அந்த அருங்காட்சி யகத்திற்கு கடிதம் எழுதியுள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள், விரைவில் அந்தச் சிலைகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!