தன் கிராமத்துக்கு ரூ.13 கோடியை அள்ளி வழங்கும் வள்ளல்

தன் கிராமத்துக்கு ரூ.13 கோடியை அள்ளி வழங்கும் வள்ளல்

2 mins read
d73ab432-b7dd-485a-9a51-33222051f803
மலேசிய தொழிலதிபர் பிர­க­தீஸ்­குமார். படம்: ஊடகம் -

பெரம்­ப­லூர்: 'சிவாஜி' படத்தில் ஏழை களுக்கு ரஜினி உதவுவது போல், தன் கிராம ­மக்­க­ளின் சிர­மங்­களைப் போக்க தனி ஒரு­வராக கள­மி­றங்கி உள்ளார் மலே­சி­யா­வில் வசிக்­கும் தொழிலதி­பர் பிர­க­தீஸ்­குமார்.

சுதந்­திர நாளில் தன் கிராமத்து மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதருவதற்காக ரூ.13 கோடியை வழங்குவதாக அறி வித்துள்ளார். தன் சொந்­தப்­பணத்தை மக்­கள் நலத் திட்டங் களுக்கு வாரி வழங்கும் பிர­க­தீஸ்­குமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பெரம்­ப­லூர் மாவட்­டத்­தில் உள்ள பூலாம்­பாடி, கடம்­பூர், புதூர், அர­ச­டி ­காடு, மேல­கு­ணங்­குடி ஆகிய ஐந்து கிரா­மங்­க­ளி­லும் ஏறக்குறைய 10,000 பேர் வசித்து வருகின்றனர். ஆனால், இந்தக் கிராமங்களில் சரியான சாலை, குடி­நீர், மின்­வி­ளக்கு, கழிவு நீர் கால்­வாய், கழிவறை, குடி­நீர் கிணறு வசதி என போதுமான வசதிகள் இன்றி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதே­போல், மலை­ய­டி­வாரப் பகுதி யான அர­ச­டி­காடு பகு­தி­யில் சாலை வசதிகளின்றி, விவசாயி­கள் தங்க ளது விளைபொருள்களை விற்க முடியாமல் அல்லாடி வரு­கின்­ற­னர்.

இந்நிலை­யில், இவ்வூரில் பிறந்து மலே­சி­யா­வில் தொழி­ல­தி­பராக விளங்­கும் பிர­க­தீஸ்­கு­மார், சொந்த ஊருக்கு வந்த நிலை­யில், அங்கு தான் வளர்ந்த ஊரில் அடிப்­படை வச­தி­கள் இல்லாததைக் கண்­டார். அரசு அதி­கா­ரி­களைச் சந்­தித்த பிர­க­தீஸ்­கு­மார், தான் பிறந்த மண்­ணின் மக்­க­ளுக்­காக தனது 'ப்ளஸ் மேக்ஸ் ஹெல்த்­கேர் பவுண்­டே­சன்' சார்­பில் ரூ.13 கோடியை வழங்கு வதாக அறி­வித்­து, முதல்­கட்­ட­மாக ரூ.90 லட்சத்துக்கான வரை­வோ­லையை பேரூ­ராட்சி அலு­வ­லர் சிவ­ரா­ம­னி­டம் வழங்கி­ உள்ளார்.