சுதந்திர தினவிழா: ரூ.10 லட்சம் நிதியை அரசிடமே திருப்பித் தந்த தலைவரின் பெருந்தன்மை நல்லகண்ணுக்கு 'தகைசால் தமிழர்' விருது கௌரவம்

சுதந்திர தினவிழா: ரூ.10 லட்சம் நிதியை அரசிடமே திருப்பித் தந்த தலைவரின் பெருந்தன்மை நல்லகண்ணுக்கு 'தகைசால் தமிழர்' விருது கௌரவம்

2 mins read
1a9369d3-3fa0-41d9-bf78-4645b851d60d
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுக்கு 'தகைசால் தமிழர்' விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ.10 லட்சம் நிதியுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. தனக்கு அளித்த விருது நிதியான ரூ.10 லட்சத்துடன் தனது நிதியாக 5,000 பணத்தையும் சேர்த்துப்போட்டு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நல்லகண்ணு வழங்கினார். படம்: ஊடகம் -
Google News Preferred Icon

சென்னை: நாடு முழுவதும் கோலா கலமாக நேற்று கொண்டாடப்பட்ட 75வது சுதந்திர தின விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்ல கண்ணுக்கு, 96, தகைசால் தமிழர் விருதை வழங்கி கௌரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

விருதுடன் தனக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் நிதியை நல்லகண்ணு அரசிடமே திருப்பித் தந்தார்.

முதல்வர் வழங்கிய ரூ.10 லட்சத்துடன் தனது சேமிப்புப் பண மான 5,000 ரூபாயையும் சேர்த்துப் போட்டு மொத்தத்தையும் முதல் வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் நல்லக்கண்ணு.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை யில் நேற்று இரண்டாவது முறையாக தேசிய கொடியேற்றி முதல்வர் உரையாற்றினார்.

இந்திய சுதந்திரப் போராட்டத் துக்கு வித்திட்டது தமிழ்நாடுதான் எனப் பெருமிதத்துடன் கூறிய முதல்வர், "விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதி யம் 18,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

"அதேபோல், தியாகிகளின் குடும்பத்திற்கான ஓய்வூதியமும் ரூ.9,000ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது," என அறி வித்தார்.

அரசு ஊழியர்களுக்கான அக விலைப்படியை 31%ல் இருந்து 34% ஆக உயர்த்தி இருப்பதாகவும் தெரி வித்த முதல்வர், இதன்மூலம் 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் மத்திய அரசு ஊழியர் களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் சொன்னார்.

அதன்பின்னர், சிறப்பாகப் பணி யாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி முதல்வர் கௌரவித்தார். தகைசால் தமிழா் விருது, ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருதுகள், மாநில இளை ஞா் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் அவர் விருதாளர் களுக்கு வழங்கினார்.

சென்னை எழும்பூர் அருங்காட்சி யகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் முழு உருவச் சிலையைத் திறந்துவைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.