மாடுகளைத் திருடிச் சென்ற மூவர் பிடிபட்டனர்

மாடுகளைத் திருடிச் சென்ற மூவர் பிடிபட்டனர்

1 mins read
3444ed46-c7a8-40c4-9f01-ccf39a4dd8ba
-

கள்ளக்குறிச்சி: கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி, தனியார் பள்ளி விடுதியின் ஒருபுறத்தில் இருந்த ஆடு, மாடுகளைத் திருடிச்சென்ற மூவரை தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.

சின்னசேலத்தைச் சேர்ந்த பூவரசன், 27, கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்த மணி கண்டன், 35, ஆதிசக்தி, 18, ஆகிய மூவரும் கலவரத்தைப் பயன்படுத்தி பள்ளி வளாகத்தில் மாட்டுப்பண்ணை பொறுப்பாளரை மிரட்டி, தாக்கி மாடுகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் ஸ்ரீமதி, 17, என்ற மாணவி உயிரை மாய்த்துக்கொண்டார். இதற்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டம் கலவரத்தில் முடிந்தது.