செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
05f79f03-c97c-4301-b276-ed5dc0ab7694
-
multi-img1 of 2

கைக்குழந்தையுடன் கதறிய பெண்

கைக்குழந்தையுடன் வாரிசு சான்றிதழ் கேட்டு கதறி அழுத ஷாலினி. படம்: தமிழக ஊடகம்

திருப்பூர்: திருப்பூரில் சிக்கனா கல்லூரித் திடலில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்க இருந்தது. அப்போது, கைக்குழந்தையுடன் அங்கு வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாலினி என்ற இளம்பெண், தான் கணவரை இழந்து தனியாக வசித்து வருவதாகவும் தனது குழந்தைக்கு வாரிசு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறி கதறி அழுதார்.

இதையறிந்த மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், வாரிசு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பெண்ணிடம் உறுதியளித்தார்.

தேசிய கொடியேற்றிய விஜயகாந்த்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் 118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

கட்சிப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உடனிருந் தார். மாணவர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. படம்: ஊடகம்

அமமுக: தலைவர் பதவிக்கு தேர்தல்

சென்னை: அமமுகவில் உள்ள தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது குறித்து அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமமுகவில் சசிகலாவுக்காக தலைவர் பதவி வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கெனவே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருந்தார்.

ஓய்வூதியத்தை அளித்த மூதாட்டி

திருவாருர்: திருவிடைமருதூரைச் சேர்ந்த கலியபெருமாள் மனைவி வனஜா, 69, என்பவர் தனது ஒரு மாத ஓய்வூதியமான 15,000 ரூபாயை ராணுவ வீரர்களுக்கு அளிப்பதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் அளித்தார். கலியபெருமாள் ஓய்வுபெற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது 78 வயதில் உயிரிழந்துவிட்டார். அவரது இறப்புக்குப் பிறகு ஓய்வூதியத் தொகை வனஜாவிடம் வழங்கப்பட்டு வருகிறது.