சென்னை: தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்ப வம் தொடர்பில், பாஜக மகளி ரணியைச் சேர்ந்த தனலட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகிய மூன்று பெண்கள் கைது செய்யப் பட்டனர். இவர்களுடன் இதுவரை 10 பேர் கைதாகி உள்ளனர்.
கடந்த 13ஆம் தேதி, மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது, அமைச்சரின் கார் மீது பெண்கள் அணியும் செருப்பு வந்து விழுந்தது.
இந்நிலையில், "மதுரை விமான நிலைய முனையத்தில் தனது ஒற்றை செருப்பைத் தவறவிட்ட சிண்ட்ரெல்லா எப்போது வேண்டு மானாலும் என் அலுவலகத்தில் அதனைப் பெற்றுக்கொள்ளலாம்," என அமைச்சர் டுவிட்டரில் பதி விட்டிருந்தார். கைது செய்து, விசா ரணை நடத்திவரும் மூவரில் ஒரு வர் காலணி வீசியவராக இருக்க லாம் என்றும் கூறப்படுகிறது.

