சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழா

சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழா

1 mins read
d851aa08-ab70-4c86-b599-eaca0a8615be
-

சீர்­காழி: சீர்­கா­ழி­யில் பாரம்­ப­ரிய நெல்­தி­ரு­விழா நேற்று நடந்­தது. இதில் 150 வகை­யான நெல்­ர­கங்­கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டன. மயி­லா­டு­துறை மாவட்­டத்­தைச் சேர்ந்த சீர்­கா­ழி­யில் நலம் பாரம்­ப­ரிய விவ­சாய அறக்­கட்­டளை சார்­பில் மறைந்த நெல் ஜெய­ரா­மன் நினை­வாக மாநில அள­வி­லான பாரம்­ப­ரிய நெல் திரு­விழா நடத்­தப்­ப­டு­வது வழக்­கம்.

இந்த ஆண்டு 8ஆம் ஆண்டு அங்­குள்ள ஒரு மேல்­நி­லைப் பள்ளி வளா­கத்­தில் நேற்று முன்­தி­னம் நடந்­தது. இதில், 150க்கும் மேற்­பட்ட பல்­வேறு பாரம்­ப­ரிய நெல் வகை­கள் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தன. தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் இருந்­தும் இந்­த நெல் திருவிழாக் கண்­காட்­சி­யைக் காண இயற்கை விவசாயிகளும் ஆர்வலர்களும் திரண்­டி­ருந்­த­னர்.

சிறு­தா­னி­யங்­கள், பழங்­கள் ஆகி­ய­வற்றை மட்­டும் வைத்து ரசா­ய­னக் கலப்­பின்றி ஐஸ்­கி­ரீம் தயா­ரிக்­கப்­பட்டு காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதனை சிறு­வர்­கள் முதல் பெரி­ய­வர்­கள் வரை அனை­வ­ரும் விரும்­பிச் சாப்­பிட்­ட­னர். மேலும் இயற்கை விதை­கள், மூலி­கைச் செடி­கள், இயற்கை உரங்­கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. இயற்கை மருத்­துவ முகாம்­களும் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. பாரம்­ப­ரிய அரிசி வகை­க­ளால் தயாரிக்கப்பட்ட உண­வு­கள் வருகையாளர்களுக்கு வழங்கப்பட்டன.