பட்டம் விடும் விழாவிற்கு 30,000 பேர் வருகை

பட்டம் விடும் விழாவிற்கு 30,000 பேர் வருகை

1 mins read
e69cf086-ac57-47be-bbb3-5568db95d800
சென்னைக்கு அருகேயுள்ள மாமல்லபுரத்தில் சுதந்திர தினத்தையொட்டி தமிழ் நாடு அனைத்துலகப் பட்டம் விடும் விழாவுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழா நடந்த மூன்று நாள்களிலும் 30,000க்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து கண்டுகளித்தனர். படம்: இபிஏ -

மாமல்­ல­பு­ரம்: சென்னை, மாமல்­ல­புரத்­தில் நடந்த அனைத்­து­ல­கப் பட்­டம் விடும் விழா நேற்று முன்­தினம் நிறை­வு­பெற்­றது. மூன்று நாள்­கள் நடந்த இந்­தப் பட்­ட­மி­டும் விழா­வில் ஏறக்­கு­றைய 30,000 பேர் வருகை தந்து வித­வி­த­மான வடி­வங்­க­ளை­யும் அள­வு­க­ளை­யும் கொண்ட ஆயி­ரக்­க­ணக்­கான பட்­டங்­கள் பறக்­க­வி­டப்­ப­டு­வ­தைக் கண்டு ரசித்­த­னர்.

மாமல்­ல­பு­ரம் கடற்­க­ரை­யில் சுற்­று­லாத்­துறை மற்­றும் குளோ­பல் மீடியா பாக்ஸ் என்ற நிறு­வ­னம் இணைந்து இந்த விழா­விற்கு ஏற்­பாடு செய்து நடத்­தின.

இதில் இந்­தியா தவிர அமெ­ரிக்கா, தாய்­லாந்­தில் இருந்து பங்­கேற்ற கலை­ஞர்­கள் பல்­வேறு வண்ண வடி­வங்­க­ளி­லான பட்­டங்­க­ளைப் பறக்­க­விட்­ட­னர்.

கடந்த 13ஆம் தேதி தொடங்­கிய இந்த விழா நேற்று முன்­தி­னம் நிறை­வ­டைந்­தது.

இதில் 80க்கும் மேற்­பட்ட பட்­டம் விடும் கலை­ஞர்­கள் பங்­கேற்று ஆயிரக்கணக்கான பட்­டங்­களை பறக்­க­விட்­ட­னர்.

நிகழ்ச்­சி­யின் நிறைவு நாளான நேற்று முன்­தி­னம் ஆக அதி­க­மான பட்­டங்­கள் பறக்­க­வி­டப்­பட்­டன.

14 ஏக்­கர் பரப்­ப­ள­வைக் கொண்ட திடலில் இந்த அனைத்­து­ல­கப் பட்­டம் விடும் விழா கொண்­டா­ட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்­சி­யில் உண­வுக் கடை­கள், விளை­யாட்­டு­கள் உள்­ளிட்ட கேளிக்கை நிகழ்ச்­சி­களும் மாலை­யில் இசை நிகழ்ச்­சி­களும் நடை­பெற்­றன.

நாட்­டின் 75ஆம் ஆண்டு சுதந்­திர விழா மற்­றும் விடு­முறை நாளை­யொட்டி பட்­டங்­க­ளை­யும் பாரம்­ப­ரிய இசை நிகழ்ச்­சி­க­ளை­யும் கண்டு ரசிப்­ப­தற்­காக சென்னை, மற்­றும் அதன் புற­ந­கர்ப் பகு­தி­க­ளைச் சேர்ந்த ஏரா­ள­மான சுற்­று­லாப் பய­ணி­கள் மாமல்­ல­பு­ரத்­தில் குவிந்­தி­ருந்­த­னர்.