தமிழகத் தலைநகர் சென்னையின் வடபழனிப் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் எட்டு பேரைக் கொண்ட ஆயுதம் ஏந்திய கும்பல் 30 லட்ச ரூபாயைத் திருடியுள்ளது.
அந்நிறுவனத்தின் உரிமையாளரையும் ஊழியர்களையும் கத்தி முனையில் மிரட்டி கும்பல் பணத்தைத் திருடியது.
திருடர்கள் மோட்டார்சைக்கிளில் தப்பியோடினர்.
நிதி நிறுவளத்தின் உரிமையாளர் அவர்களைத் துரத்தினார்.
அப்போது 22 வயது சையத் ரியாஸ் என்று அடையாளம் காணப்பட்ட திருடர்களில் ஒருவர் மோட்டார்சைக்கிளிலிருந்து கீழே விழுந்தார்.
வழிப்போக்கர்கள் அவரைப் பிடித்தனர்.
அதைத் தொடர்ந்து அவர் காவல்துறையின் கண்காணிப்பில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சென்னையில் ஒரே வாரத்திற்குள் நிதி நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற இரண்டாவது கொள்ளைச் சம்பவம் இது.

