தஞ்சாவூர்: இரண்டாம் உலகப் போரின்போது, இரவு நேரங்களில் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன.
அப்போது, போர்விமானங்க ளின் பார்வையில், பூமியில் உள்ள நகரங்கள் தெரியாமல் இருப்பதற்காக இரவு நேரங்களில் அனைத்து விளக்குகளும் அணைப்பதற்கு சங்கு ஒலிக்கப்படும்.
தஞ்சாவூரில் ஆயுதப் படைத் திடலின் பின்புறத்தில் இரும்புத்தூண்களில் போர் சங்கு அமைக்கப்பட்டிருக்கும். இந்த சங்கு ஒலித்ததும் விளக்குகளை அணைக்கவேண்டும் என்பது அரசு உத்தரவாக இருந்தது.
1967ஆம் ஆண்டுக்குப் பிறகு பொதுமக்களுக்கு நேர காலத்தை தெரியப்படுத்த இந்த சங்குகள் பயன்படுத்தப்பட்டன.
தினமும் காலை 10, மதியம் 1 மணி, மாலை 5 மணி என மூன்று முறை சங்கு ஒலித்தது.
இந்நிலையில், பராமரிப்பு இல்லாத காரணத்தால் 1980க்குப் பிறகு இந்தச் சங்கு செயல்படவில்லை.
தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் இந்தச் சங்கை சீரமைத்து இந்த ஆண்டின் 75வது சுதந்திர தினத்தன்று மீண்டும் ஒலிக்கவைத்தது.
இதுகுறித்து தஞ்சை மேயர் ராமநாதன் கூறுகையில், "1939ல் இச்சங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
"இதை மீண்டும் புதுப்பித்து இப்போது ஒலிக்க வைத்துள்ளோம். இதேபோன்ற சங்குகளை தஞ்சையில் ஆறு இடங்களில் அமைத்து, தினமும் காலை 6, காலை 9, மதியம் 12, மாலை 6, இரவு 9 மணி என ஐந்து முறை ஒலிக்கவைத்து வருகிறோம்," என்று கூறினார்.

