ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி: அடுத்தடுத்து சிக்கிய நிர்வாகிகள்

ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி: அடுத்தடுத்து சிக்கிய நிர்வாகிகள்

1 mins read
9e7e3985-9386-479f-bf66-54e5e9e3914d
-

சென்னை: ஐஎ­ஃப்­எஸ் அனைத்­து­லக நிதி நிறு­வன மோச­டி­யில் பொது­மக்­க­ளி­டம் கோடிக்­க­ணக்­கில் பணம் வசூ­லித்த இரு முக்­கிய நிர்­வா­கி­க­ளைப் பொரு­ளா­தா­ரக் குற்­றப்­பி­ரிவு காவ­லர்­க­ள் கைது செய்­துள்ளனர்.

சென்­னை­யைத் தலைமையிட­மா­கக் கொண்டு இயங்கி வரும் இந்த தனி­யார் நிறு­வ­னத்துக்கு தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் 21 கிளை­கள் செயல்­பட்டு வரு­கின்­றன. இந்த நிறு­வ­னத்­தின் மீது தொடர்ந்து மோச­டிப் புகார்­கள் கூறப்­பட்டு வந்­தன.

இந்­நி­லை­யில், 21 இடங்­க­ளி­லும் பொரு­ளா­தா­ரக் குற்­றப்­பி­ரிவு காவ­லர்­கள் சோதனை நடத்­தி­னர்.

நட்­சத்­திர தங்­கும் விடு­தி­களில் வாடிக்­கை­யா­ளர்­க­ளைச் சந்­தித்து ஒரு லட்­சம் பேரி­டம் ரூ.6,000 கோடி வரை வசூ­லித்­துள்­ள­னர்.

ஒரு லட்­சம் ரூபாய் கட்­டி­னால் மாதம் 8,000 ரூபாய் தரு­வ­தா­கக் கூறி பல கோடி ரூபாய் முத­லீ­டு­களை ஈர்த்­தது தெரி­ய­வந்­தது.

ஆனால், குறிப்­பிட்­ட­படி, மாதந் தோறும் வட்­டித் தொகையை முறை­யாக வழங்­கா­மல் 1,000 கோடி வரை மோசடி செய்­துள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

காஞ்­சி­பு­ரம் மாவட்டக் கிளை இயக்­கு­நர் மின்­மினி சர­வ­ணன் ஏற்­கெ­னவே கைதா­னார்.

இப்­போது, சென்னை ராஜா அண்­ணா­மலைபுரத்­தைச் சேர்ந்த குப்­பு­ராஜ், 40, ராணிப்­பேட்­டையை சேர்ந்த ஜெக­நா­தன், 34, ஆகிய கிளை இயக்­கு­நர்­களைக் காவ­லர்­கள் கைது செய்­துள்­ள­னர்.

ஒரேநாளில் இரு­வ­ருக்­கும் இடையே எட்­டு­கோடி ரூபாய் பணப் பரி­மாற்­றம் நடந்­துள்­ள­தால் இதை வைத்து அவர்களைப் பிடித்­துள்­ள­தா­க­வும் காவ­லர்­கள் கூறி­னர்.