கடலில் 50 அடி ஆழத்தில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம்

சென்னை: சென்­னையை அடுத்த நீலாங்­கரை கடற்­ப­கு­தி­யில் ஏறத்­தாழ 50 அடி ஆழத்­தில் சுரேஷ், கீர்த்தி ஆகிய இரு­வ­ரும் தங்­க­ளது திரு­மண நிச்­சயதார்த்­தத்தை வித்­தி­யா­ச­மான முறையில் செய்து கொண்­டுள்­ள­னர்.

ஆந்­திர மாநி­லம் சித்­தூர் பகு­தி­யைச் சேர்ந்தவர் சுரேஷ். சென்னை ஈஞ்­சம்­பாக்­கத்தை சார்ந்தவர் கீர்த்­த­னா­.

பொறி­யி­யல் பட்­ட­தா­ரி­க­ளான இவர்­கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக சென்­னை­யில் ஒரே அலு­வ­ல­கத்­தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களது திருமணத்துக்கு இருவீட்­டா­ரும் சம்­ம­தம் தெரி வித்துள்ள நிலையில், கடந்த 14ஆம் தேதி முதலில் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளனர்.

கட­லில் சேரும் தேவை­யற்ற பிளாஸ்­டிக் கழி­வு­க­ளைத் தவிர்க்­கும் வகை­யில் விழிப்­பு­ணர்வு ஏற்­படுத்­தும் நோக்­கோடு, நிச்­ச­ய­தார்த்தத்தை நடத்தி உள்ள­னர்.

நீலாங்கரை கடற்­க­ரைப் பகு­தி­யில், ஆழ்­க­டல் நீச்­சல் பயிற்­சி­யா­ளர் அர­விந்­தன் கற்­றுத் தந்த பயிற்சி முறை­க­ளைப் பின்­பற்றி, சுவா­சிப்­ப­தற்கு தேவை­யான பிரா­ண­வாயு உரு­ளை­யு­டன் சென்ற இவர்கள், ஏறத்­தாழ 50 அடி ஆழ கடல் நீருக்­குள் மூழ்கி மாலை மாற்­றிக்­கொண்டு, தங்க மோதி­ரத்தையும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் அணி­வித்து நிச்­ச­ய­தார்த்த நிகழ்ச்­சியை நடத்தி உள்ளனர். விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும் என்றும் கூறியுள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!