நிதி நிறுவனத்தில் கத்தி முனையில் ரூ.30 லட்சம் சூறை; பிடிபட்டவருக்கு அடி உதை சென்னையில் மீண்டும் கொள்ளை

2 mins read
163db028-d3d0-4bd0-b655-9b0c62a621db
-

சென்னை: சென்னை வட­ப­ழ­னி­யில் செயல்­பட்டு வரும் தனி­யார் நிதி நிறு­வ­னத்­துக்­குள் புகுந்து, அங்­கி­ருந்த ஊழி­யர்­க­ளைக் கத்தி முனை­யில் மிரட்டி பாது­காப்­புப் பெட்ட கத்­தில் இருந்த ரூ.30 லட்­சத்தை கொள்­ளை­யர்­கள் சுருட்­டிக் கொண்டு தப்­பி­யுள்­ள­னர்.

இந்­தக் கொள்­ளை­யில் தொடர்பு டைய ஏழு பேரில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

தலை­ம­றை­வா­ன­வர்­க­ளைப் பிடிக்க ஐந்து தனிப்­படை காவ­லர்­கள் கள­மி­றங்கி உள்­ள­னர்.

சென்னை எண்­ணூ­ரைச் சேர்ந்த தீபக்,32, என்­ப­வர், சென்னை வட­பழனி மன்­னார்­மு­தலி தெரு­வில் 'ஓசோன் கேபி­ட்டல்' என்ற பெயரில் நிதி நிறு­வ­னம் நடத்தி வரு­கி­றார்.

இந்நிறு­வ­னம் சிறு வியாபாரி­க­ளுக்­கும் கோயம்­பேடு சந்தையில் உள்ள மொத்த வியா­பாரிகளுக்­கும் வட்­டிக்­குப் பணத்­தைக் கட­னா­கக் கொடுத்து வாங்கி வரு­கிறது.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தினம் மாலை இந்­நி­று­வ­னத்­துக்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்­பல், நிறு­வ­னத்­தில் பணி­பு­ரிந்து கொண்­டி­ருந்த தீபக், சஞ்­சய் குமார் ஆகி­யோரை கத்­தி­யைக் காட்டி மிரட்டி பாது­காப்­புப் பெட்­ட­கத்­தில் இருந்த ரூ.30 லட்­சம் ரொக்­கத்­தைக் கொள்ளை அடித்­துக்­கொண்டு இரு­சக்­கர வாக­னத்­தில் தப்­பி­னர்.

இதைத்­தொ­டர்ந்து, நிதி நிறு­வன ஊழி­யர்­களும் பொது­மக்­கள் உத­வி­யு­டன் கொள்­ளை­யர்­களை விரட்­டிச் சென்­ற­னர்.

அப்­போது, ஒரு இடத்­தில் சாலை­யில் இருந்த வேகத் தடை­யில் மோதி ஒரு இரு சக்­கர வாக­னம் விழுந்­தது. அதை ஓட்­டிய விரு­கம்­பாக்­கத்­தைச் சேர்ந்த சையது ரியாஸ், 22, என்ற கொள்­ளை­யர் மட்­டும் பிடி­பட்­டார்.

அவரை நிதி நிறு­வன ஊழி­யர்­களும் பொது­மக்­களும் அடித்து, உதைத்­த­னர். தலை­யில் பலத்த காய­ம­டைந்த சையது ரியாஸ், வட­ப­ழ­னி தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அனுமதிக்­கப்­பட்­டுள்­ளார்.

தலை­ம­றை­வாக உள்ள அவ­ரது கூட்­டா­ளி­க­ளைத் தேடி, ஆந்­திரா, திருச்சி ஆகிய இடங்­க­ளுக்கு தனிப்­படை காவ­லர்­கள் விரைந்­துள்­ள­னர்.

இஸ்­மா­யில், பரத், கிஷோர், ஜானி, தமிழ், மொட்டை ஆகி­யோ­ரு­டன் இணைந்து கொள்­ளை­யில் ஈடு­பட்­ட­தாக சையது ரியாஸ் விசா­ர­ணை­யில் தெரி­வித்­துள்­ளார். தப்­பி­யோ­டிய கொள்­ளை­யர்­க­ளை சிசி­டிவி காட்­சி­கள் மூலம் கைது செய்து, பணத்தை மீட்­கும் பணி­க­ளைக் காவல்­து­றை­யி­னர் தீவி­ரப்­ ப­டுத்­தி­யுள்­ள­னர்.

கடந்த 13 ஆம் தேதி சென்னை அரும்­பாக்­கத்­தில் உள்ள தனி­யார் வங்­கி­யில் 32 கிலோ தங்க நகை­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டன. இந்­தச் சம்­ப­வத்­தில் ஐவர் கைது செய்­யப்­பட்டு அனைத்து நகை­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன. 'ஜென்டில் மேன்' படத்தைப் பார்த்து கொள்ளை யடித்ததாக கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்­தச் சூழ­லில் ஒரே வாரத்­துக்­குள் மீண்­டும் அதே பாணி­யில் கொள்­ளைச் சம்­ப­வம் நட­ந்­துள்­ளது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தியுள்­ளது.