தருமபுரி: தருமபுரி மாவட்டம், இண்டூரை அடுத்த பேடரஅள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 75வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
மாணவ மாணவிகள், பெற்றோர், ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.
தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி இந்த ஆண்டு டன் ஓய்வு பெறுவதால் அவரை தேசிய கொடியை ஏற்றும்படி கேட்டுக்கொள்ள, அவர் மறுத்துவிட்டார்.
"நான் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவள். என் கடவுளுக்கு மட்டுமே வணக்கம் செலுத்துவேன்," என்று கூறியதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்.
உதவி தலைமை ஆசிரியர் முருகன் தேசிய கொடி ஏற்றினார்.
தமிழ்ச்செல்வி கூறுகை யில், "வணக்கம் என்பது கடவுளுக்கு மட்டும்தான் கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால், தேசிய கொடியை மிகவும் மதிக்கிறேன். மரியாதை கொடுக்கிறேன், மற்றபடி, அரசின் அனைத்து சட்ட திட்டங்களுக்கும் நான் கீழ்படிவேன்," என்றார்.
அதிருப்தி அடைந்த மக்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

